விமான விபத்து.. பிரேசில் தேசிய கால்பந்து அணி வீரர்கள் நலம்! விபத்தில் சிக்கியது யார் தெரியுமா?
ரியோநெக்ரோ: பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதாக முதல் தகவல் வந்தபோது, அது அந்த நாட்டு தேசிய கால்பந்து அணியாக இருக்கும் என்ற அச்சத்தில் ரசிகர்கள் உறைந்தனர். ஆனால் அந்த நாட்டு கிளப் அணி வீரர்கள் விபத்தில் சிக்கியதாக பிறகு உறுதி செய்யப்பட்டது.
கால்பந்துக்கு பெயர் பெற்ற பிரேசில் நாட்டில் பல்வேறு கிளப் அளவிலான அணிகள் உள்ளன. அதில் ஒன்றின் பெயர்தான், சபெகோன்சே. இவர்கள் பல்வேறு நாடுகளின் உள்நாட்டு அளவிலான கால்பந்து தொடர்களில் பங்கேற்று ஆடுவது வழக்கம்.
Brazil football team in Colombia plane crash https://t.co/2c0dq1eVqb
— BBC News (World) (@BBCWorld) November 29, 2016
இதேபோன்ற ஒரு தொடர்தான், கோபா சுடமெரிகானா. கொலம்பியாவில் அட்லெடிகோ அணியை எதிர்த்து அந்த நாட்டு நேரப்படி நாளை மாலை 6.45 மணிக்கு ஒரு கால்பந்து போட்டி நடைபெறவிருந்தது. அந்த போட்டியில் ஆடுவதற்காக சபெகோன்சே அணி பயணித்துள்ளது.
சபெகோன்சே கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 72 பேர் இன்று பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு சென்றபோதுதான் அந்த நாட்டு நேரப்படி இரவு 10.15 மணியளவில் அந்த நாட்டு வான் எல்லையில் வைத்து அந்த விமானம் நொறுங்கி விழுந்தது.
பிரேசில் நாட்டு தேசிய அணிக்கு ரசிகர்கள் அதிகம். பிரேசில் அணியினர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானபோது, அந்த ரசிகர்கள்தான் அதிகம் அதிர்ந்துபோயினர். பின்னர் உள்ளூர் கிளப் அணியினர் விபத்தில் சிக்கிய விவரம் தெரியவந்தது. அதிர்ச்சி என்றபோதிலும், தங்கள் ஆதர்ஷ வீரர்கள் பத்திரமாக இருப்பதை பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications