நள்ளிரவில் குலுங்கிய வீடுகள்.. தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு
தைபே: தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கியுள்ளன. இருப்பினும் என்ன மாதிரியான சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் இன்றும் வெளியாகவில்லை.
தைவானிலிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு நகரமான ஹுவாலினில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹுவாலினில் பூமிக்கு அடியில் சுமார் 9.7 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஏற்கெனவே மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது. அந்த வகையில் இது இரண்டாவது நிலநடுக்கமாகும்.

இதில், கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சுரங்க பாதைகளில் போக்குவரத்துகள் மிதமான வேகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பூகோள ரீதியாக தைவான் நகரம் இரண்டு பூமி தகடுகளின் நுணியில் அமைந்துள்ளது. எனவே அடிக்கடி நிலநடுக்கத்திற்கு ஆளாகிறது.
கடந்த ஏப்ரலில் இங்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருந்தனர். அதேபோல 900க்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்வுகளே நிலநடுக்கம் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது பூமியின் மீது நிலத்தட்டுக்கள் இருக்கின்றன. இதைத்தான் விஞ்ஞானிகள் டெக்டானிக் பிளேட் என்று கூறுகின்றனர். ஒரு காலத்தில் இவை அனைத்தும் இணைந்து ஒரே தட்டாக பெரிய நிலப்பரப்பாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தில் இது உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக சென்றுவிட்டது. இப்படித்தான் ஏழு பெரும் கண்டனங்கள் உருவாகின.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications