ஹெச்.எம்னா குச்சியை வச்சு மிரட்டிட்டே இருக்கணுமா என்ன.. இந்த தலைமை ஆசிரியர் வேற லெவல்!
மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்க பள்ளி முதல்வர் ஆடும் டான்ஸ் வீடியோ வைரலாகிறது.
பெய்ஜிங்: ஸ்கூல் ஹெட் மாஸ்டர் என்றால் கையில் குச்சி வச்சிக்கிட்டு மிரட்டிக்கிட்டே இருக்கணுமா என்ன? இப்படிகூட இருக்கலாம் என்று பாட்டு பாடி டான்ஸ் ஆடி காட்டுகிறார் ஒரு தலைமை ஆசிரியர்.
இணையத்தில் வீடியோ ஒன்று செம வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. அது ஒரு பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள லின்யி மாகாணத்தில் ஸி குவான் என்ற பள்ளியில் எடுக்கப்பட்டது. இந்த பள்ளி ஒரு தொடக்கப்பள்ளி முழுசும் சிறுவர், சிறுமியர்கள் உள்ளனர்.

உற்சாகம்
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாங் பெங்ஃபீ ஆகும். இவருக்கு 40 வயதாகிறது. இவரது வேலை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை பூஸ்ட் செய்வதுதான். அதாவது சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்க வைப்பதுதான். அதற்காக இவர் தன் பள்ளி மாணவர்களுக்கு டான்ஸ் கற்று கொடுக்கிறார்.

மாணவர்கள் நடனம்
நம்ம ஊரில் காலையில் தமிழ்தாய் வாழ்த்து மாதிரி, இவர் இப்படி ஒரு விஷயத்தை கையில் எடுத்து உள்ளார். மாணவர்களை பல வரிசைகளில் நிற்க வைத்து எல்லாருக்கும் முன்னாடி போய் தான் நின்று கொண்டு ஆடுகிறார். இவர் ஆடுவதை பார்த்து மற்ற மாணவர்களும் ஆடுகிறார்கள்.

டான்ஸ் மாஸ்டர்
ஹெச்.எம். கையில் ஒரு மைக்கையும் பிடித்து கொண்டே ஆடுகிறார். அதில் அடிக்கடி டான்ஸ் ஸ்டெப்களை சொல்கிறார். சில சமயம் பாடுகிறார்... மாணவர்களைவிட ஹெச்.எம். படு சுறுசுறுப்பாக டான்ஸ் ஆடுகிறார். கூடவே ஸ்கூல் டீச்சர்களும் ஆடுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது பள்ளி தலைமை ஆசிரியர் என்ற விஷயமே மறந்துபோய் டான்ஸ் மாஸ்டர் போல தெரிகிறார்.

குவிகிறது பாராட்டு
மாணவர்களும் கால்களை, கைகளை நீட்டியும் நகர்த்தியும் ஆடுகிறார்கள். மாணவர்களுக்கு தவிர, இந்த டான்சை பார்ப்பவர்களுக்கும் சுறுசுறுப்பு வந்துவிடுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருவதுடன், இந்த டான்ஸ் மாஸ்டருக்கு ஸாரி... ஹெட் மாஸ்டருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications