மனிதர்கள் போல் சோப்பு போட்டுக்குளித்த எலி.. வைரலாகும் வீடியோ!
மனிதர்களைப் போன்று எலி ஒன்று சோப்பு போட்டுக் குளித்த வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

ஹுவாரஸ்: மனிதர்களைப் போன்று எலி ஒன்று சோப்பு போட்டுக் குளித்த வீடியோ வைரலாகியுள்ளது.
பெரு நாட்டின் ஹுவாரஸ் நகரத்தை சேர்ந்தவர் ஜோஸ் கோரியா. டிஜெவான இவர் வழக்கம்போல் குளிப்பதற்காக தனது வீட்டு குளியலறைக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த ஸிங்கில் எலி ஒன்று சோப்பு நுரையை தன்மீது பூசி குளிப்பதை பார்த்த அவர் ஷாக்கானார். மனிதர்களைப் போலவே கை கால்களையெல்லாம் சோப்பு போட்டு தேய்த்து குளித்தது அந்த எலி.

குளித்த எலி
இதனைக் கண்டு வியந்துபோன ஜோஸ் கோரியா உடனடியாக தனது போனில் எலி குளிப்பதை வீடியோ எடுத்தார். எலியின் பிரைவெசி பாதிக்கக்கூடாது என்று நினைத்த அவர் எலிக்கு தெரியாமலே அதுகுளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

வைரலாகும் வீடியோ
இந்த வீடியோவை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோரியா சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். தற்போது வரை இந்த வீடியோவை 40 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
30 வினாடிகள் குளிப்பு
30 வினாடிகளுக்கும் மேலாக அந்த எலி சோப்பு போட்டு குளித்துள்ளது. குளித்தவுடன் எலி ஓட்டம் பிடித்துள்ளது.

தனியுரிமையை பாதுகாக்க..
இதுகுறித்து பேசிய கோரியா அந்த எலி தன்னை சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்பியதாக நினைக்கிறேன் என தெரிவித்தள்ளார். தான் விலங்குகள் மீது அதிக அக்கறை கொண்டவன் என்பதால் எலியின் தனியுரிமையை பாதுகாக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

விரைவில் பிரபலம்..
தான் அந்த எலியை காயப்படுத்த விரும்பவில்லை என்றும் அதனால் அமைதியாக அதனை படம்பிடித்துவிட்டதாகவும் ஜோஸ் கோரியா தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ மூலம் மிகவும் விரைவாக பிரபலமடைந்துவிட்டதாகவும் கோரியா ஆச்சரியமடைந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications