அழகாக இல்லை என பேஸ்புக்கில் கமெண்ட்: பெற்றோர் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு மாணவி தற்கொலை!
அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவருக்கு தான் அழகாக இல்லை என பேஸ்புக்கில் கமெண்ட்கள் வந்தன. இதனால் மனமுடைந்த அவர் பெற்றோர் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 18 பள்ளி மாணவிக்கு பேஸ்புக்கில் தான் அழகாக இல்லை என கூறப்பட்டதால் மனமுடைந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோரின் கண்முன்னே நிகழ்ந்த இந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிராண்டி வேலா என்ற 18 வயது பள்ளி மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை போஸ்ட் செய்திருந்தார். அதனை பார்த்த பலர் பிராண்டி வேலா மிக குண்டாக இருப்பதாகவும் அழகாக இல்லை என்றும் கமெண்ட் போட்டுள்ளனர்.

இதனை பார்த்த பிராண்டிவேலா மனமுடைந்து போனார். பின்னர் அவர் தனது தங்கை ஜாக்கிலினுக்கு 'உன்னை நேசிப்பதாகவும், தயவு செய்து இதனை நினைவில் வைத்துக்கொள், எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு' எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ந்து போன ஜாக்கிலின் அதனை தனது பெற்றோரிடம் காண்பித்துள்ளார். சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக பிராண்டிவேலாவின் படுக்கையறைக்கு ஓடினர்.
அப்போது அங்கே கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த பிராண்டிவேலா தான் குண்டாக அசிங்கமாக இருக்கிறேன் கூறியுள்ளார். மேலும இதனால் சாகப் போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நீ அழகாகதான் இருக்கிறாய் என கூறி கெஞ்சியுள்ளனர். ஆனால் தனது முடிவில் தீர்க்கமாக இருந்த பிராண்டிவேலா பெற்றோரின் கண்முன்னே துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications