வேலையை காட்டிய இஸ்ரேல்.. ஓடி பதுங்கிய ஹிஸ்பொல்லாவின் டாப் தலை.. சீக்ரெட் விமானத்தில் திக் பயணம்
டெஹ்ரான்: லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இடையே ஹிஸ்பொல்லாவின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் துணைச் செயலாளர் நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றதாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இயங்கும் எரெம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவிற்கு அரசுமுறைப் பயணமாக ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி பயன்படுத்திய விமானத்தில் காசிம் தப்பித்ததாக செய்தியில் கூறப்பட்டு உள்ளது. இந்த விமானத்தில் அவர் ரகசியமாக பயணம் செய்துள்ளார். காசிம் கடந்த அக்டோபர் 5 அன்று பெய்ரூட்டில் இருந்து புறப்பட்டு ஈரானுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இஸ்ரேலால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக இஸ்லாமிய அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்கள் அவரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டதாக கூறப்பட்டு உள்ளது.

1. கடந்த அக்டோபர் 17, 2024 அன்று, ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்தது.
2. ஹசன் நஸ்ரல்லா: லெபனானின் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ், செப்டம்பர் 28, 2024 அன்று கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. ஹிஸ்புல்லாவை பல வருடங்கள் வழி நடத்திய தலைவர் இவர். இப்படிப்பட்ட நிலையில்தான் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இடையே ஹிஸ்பொல்லாவின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் துணைச் செயலாளர் நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றதாக செய்தி வெளியாகி உள்ளது.
3. ஃபட்டா ஷெரிப்: இஸ்ரேலிய இராணுவம் 2024 செப்டம்பர் 30 அன்று லெபனானில் ஹமாஸ் தலைவர் ஷெரீப்பை கொன்றதாக அறிவித்தது.
4. அலி கராக்கி: ஹெஸ்பொல்லாவின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான அலி கராக்கி நஸ்ரல்லாவை கடந்த மாதம் இஸ்ரேல் கொன்றதாக அறிவித்தது. நிலத்தடி பதுங்கு குழியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல்வேறு நிலைகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
5. நபில் கௌக்: செப்டம்பர் 28, 2024 அன்று வான்வழித் தாக்குதலில் கௌக்கை கொன்றதாக அறிவித்தது. இவர் ஹிஸ்புல்லாவின் மத்திய கவுன்சிலின் துணைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிலடி: ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்துவதற்கான நாளை இஸ்ரேல் குறித்துவிட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது. நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் அந்நாட்டு அரசிடம் தெரிவித்து உள்ளார்களாம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடக்கும். இஸ்ரேல் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும். ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் பிடனின் இந்த கோரிக்கையை நெதன்யாகு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார்.
பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்த நிழல் யுத்தம் ஒரு நேருக்கு நேர் இராணுவ மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நேரம் உள்ள நிலையில்.. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்க போவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவு தருவோம்.. ஆனால் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை ஆதரிக்கப் போவதில்லை என்று அதிபர் ஜோ பிடன் பிரதமர் நெதன்யாகுவிடம் பகிரங்கமாக தெரிவித்துள்ளாராம். பிடன் மற்றும் நெதன்யாகு சமீபத்தில் போனில் பேசியபோது, இதை பற்றி ஆலோசனை செய்துள்ளனர்.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications