தந்தையின் கடைசி ஆசைப்படி பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி அடக்கம் செய்த மகன்!
நைஜீரியாவில் தந்தையின் கடைசி ஆசைப்படி அவரது உடலை மகன் ஒருவர் பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

அனம்பரா: நைஜீரியாவில் தந்தையின் கடைசி ஆசைப்படி அவரது உடலை மகன் ஒருவர் பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசைப்படாத மனிதர்கள் இருக்கவே முடியாது. இறப்பதற்குள் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும், இவரை சந்திக்க வேண்டும், இப்படி ஒரு நாளாவது வாழ்ந்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
ஆனால் அவையெல்லாம் நிறைவேறுமா அல்லது நிறைவேறாமலே போகுமா என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். ஒரு சிலரின் வாழ்க்கையில் அவர்களின் கடைசி ஆசை, நெருக்கமானவர்களால் நிறைவேற்றப்படும்.

நிறைவேற்றிய மகன்
அந்த வகையில் நைஜீரியாவில் மகன் ஒருவர் தனது தந்தை மரணத்திற்கு பிறகு அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதாவது, நைஜீரிய நாட்டின் அனம்பரா மாகாணத்தில் உள்ள மொபோசி பகுதியைச் சேர்ந்தவர் அசுபுயுகி.

தந்தை மரணம்
இவர் அந்தப்பகுதியில் உள்ள மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராவார். இவரது தந்தை அண்மையில் மரணமடைந்தார்.

பிஎம்டபிள்யூ காருடன் அடக்கம்
இதைத்தொடர்ந்து தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக அசுபுயுகி புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி தனது தந்தையின் உடலை, பூமிக்குள் அடக்கம் செய்தார்.

ரூ.66 லட்சம் மதிப்பு
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அசுபுயுகியின் தந்தை அடக்கம் செய்யப் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ காரின் மதிப்பு 66,000 டாலர் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.66 லட்சம் ஆகும்.

ஆசை நிறைவேற்றம்
உடலை புதிய பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என அசுபுயுகியின் தந்தை முன்னரே கூறியிருந்தாராம். அதன்படி தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றியிருப்பதாகவும் அசுபுயுகி கூறியுள்ளார்.

பிஎம்டபிள்யூ கார் சவப்பெட்டி
பிஎம்டபிள்யூ கார் சவப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications