பறந்து செல்லும் போதே ஜன்னல் உடைந்து நொறுங்கியது.. சவுத்வெஸ்ட் விமானத்தில் நடந்த பரபரப்பு
நேற்று சவுத்வெஸ்ட் ஏர்லைன் விமானம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அதன் ஜன்னல் ஒன்று மொத்தமாக விமானம் பறக்கும் போதே உடைந்து விழுந்துள்ளது.
Recommended Video

சிகாகோ: நேற்று ஏர் சவுத்வெஸ்ட் ஏர்லைன் விமானம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அதன் ஜன்னல் ஒன்று மொத்தமாக விமானம் பறக்கும் போதே உடைந்து விழுந்துள்ளது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சிகாகோவில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் உட்பக்க ஜன்னல் பாகங்கள் உடைந்து அங்கு இருந்த பயணிகளின் மீது விழுந்துள்ளது.உலகிலேயே மொத்தமாக 26 முறைதான் இப்படி நடந்து இருக்கிறது.

எப்படி இந்த சம்பவம் நடந்தது
விமானம் சென்று கொண்டு இருக்கும் போது வெளியே பெரிய சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் என்ன சத்தம் என்று சுதாரிப்பதற்குள், விமானத்தில் ஒரு இருக்கைக்கு அருகில் இருந்த ஜன்னல் உடைந்து நொறுங்கி உள்ளது. ஜன்னலின் பெரிய பகுதி அப்படியே உடைந்து காற்றில் பறந்து இருக்கிறது. இது உள்ளே இருந்த பயணிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
ஏன்
விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஒரு பக்கத்தில் உள்ள இன்ஜின் மோசமாக வெடித்து இருக்கிறது. அந்த அதிர்ச்சியில்தான் விமானத்தின் ஜன்னலும் உடைந்துள்ளது. இந்த ஜன்னல் உடைந்த காரணத்தால் விமானத்திற்குள் வேகமாக காற்று வீசி இருக்கிறது.
|
பதட்டம்
இதனால் விமானத்தில் அதிக அளவில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. சில இருக்கைகளுக்கு மேலே இருக்கும் ஆக்சிஜன் குழாய்கள் கீழே விழுந்து மக்களை பயத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஆனாலும் விமானி கடைசி நேரத்தில் சுதாரித்தார். பின் அவர்கள் செல்லும் வழியில் இருக்கும் ஒஹாயோ விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்கள்.
|
எதுவும் ஆகவில்லை
இதனால் உள்ளே இருந்த 77 பயணிகளுக்கு எதுவும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், எல்லோரும் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று விமானம் நிறுவனம் கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications