நடத்தையில் சந்தேகம்... மனைவி காதுகளை துண்டித்த கணவன்... ஆப்கனில் அதிர்ச்சி
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் ஒருவர் மனைவியின் காதுகளை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரின் 2 காதுகளையும் கணவரே துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இனி கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பெண் ஒருவரின் காதுகளை கணவரே அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கஜிண்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெரினா. தற்போது 23 வயதை தொட்டுள்ள இவருக்கு 13 வயதிலேயே திருமணமாகிவிட்டது.
குழந்தைகள் சகிதமாக வாழ்ந்து வரும் இவரை, அவரது கணவர் தாய்வீட்டுக்கு கூட அனுப்பாமல் அடிமைப் போல் நடத்தி வந்துள்ளார். ஜெரினாவின் நடத்தை மீதும் சந்தேகம் கொண்ட அவர், ஜெரினாவை அடிக்கடி அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஜெரினா மீதான சந்தேகம் முற்றவே ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கடுமையாக தாக்கியதோடு அவரின் இரண்டு காதுகளையும் அறுத்து துண்டித்துள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெரினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தவறு ஏதும் செய்யாத தன்னை தனது கணவர் நாள்தோறும் சித்ரவதை செய்வதாக கூறிய ஜெரினா இனி ஒரு போதும் அவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications