இறைவனை காட்டுவதாக கூறி பக்தர்களை கொத்தாக கொன்ற சம்பவம்! கென்யாவில் ஷாக்.. மதபோதகரிடம் விசாரணை
நைரோபி: கென்யாவில் கடவுகளை காண்பிப்பதாக கூறி, 400க்கும் அதிகமான மக்களை கொன்று குவித்ததாக மத போதகர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது தீவிரவாத நடவடிக்கைக்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. என்னதான் இந்த நாடு குடியரசு நாடாக இருந்தாலும் இங்கு மதத்தின் பெயரால்தான் அனைத்தும் நடக்கும். மத போதகர்கள், மத தலைவர்கள் அரசு அதிகாரத்தில் முக்கிய இடத்தில் இருப்பதால், இந்த தீவிர மத பற்றை அரசு பெயரளவுக்கு மட்டுமே எதிர்த்து வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த சம்பவம் ஒன்று உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதாவது இந்திய பெருங்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் கென்யாவின் ஷகாஹோலா காட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சில பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஆழமற்ற கழிமுக பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பகுதியை முழுமையாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.
இப்பகுதியை தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து கென்ய துணை ராணுவம் காவல்துறையின் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தோண்டி பார்த்ததில் சுமார் 400க்கும் அதிகமான சடலங்கள் கிடைத்தன. இந்த காட்டில் பழங்குடியினர் யாரும் கிடையாது. இப்படி இருக்கையில் இங்கு எப்படி இவ்வளவு உடல்கள் வந்தது என்பது குறித்து விசாரணை தொடங்கியது.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த பகுதியில் 'குட் நியூஸ் இன்டர்நேஷனல்' எனும் பெயரில் ஒரு தேவாலயம் இயங்கி வந்திருக்கிறது. இந்த தேவாலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள்தான் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து தேவாலயத்தின் நிர்வாகிகள், பாதிரியார்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேவாலயத்தின் பாதிரியார்கள் தங்கள் சர்ச்சுக்கு வரும் மக்களில் மிகவும் பலவீனமான மனம் கொண்டவர்களை தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் அவர்களிடம் ஏசுவை காண வேண்டுமா? என்று ஆர்வத்தை தூண்டுவார்கள். ஆர்வ மிகுதியில் பக்தர்களும் சில சடங்குகளை நடத்துவார்கள். பின்னர் இறுதியாக உயிர் பலி நடக்கும். அதாவது ஏசுவை காண வேண்டும் எனில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவரது பேச்சை கேட்ட பக்தர்கள் ஷகாஹோலா காட்டில் உண்ணா நோன்பு இருக்க தொடங்கினர். இப்படியாகதான் 440 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தேவாலயத்தின் தலைவர் 'பால் மாக்கன்சி நெங்கே' சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி கூறுகையில், "தற்போது 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள காடு முழுவதுமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. காட்டின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளிகளான என்தெங்கே, மூன்று கிராமங்களுக்கு நாசரேத், பெத்லஹேம் மற்றும் யூதேயா என பெயரிட்டுள்ளார். அதேபோல இந்த கிராமத்தில் இருப்பவர்களை உண்ணாவிரதம் இருக்கவும் தூண்டியுள்ளார். இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஓராண்டாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, முக்கிய குற்றவாளியான பால் மாக்கன்சி நெங்கே மீது தீவிரவாத நடவடிக்கைகளுக்கான விசாரணை தொடங்கியுள்ளது. அவர் தீவிரவாதியா? எந்த பயங்கரவாதி அமைப்பின் செயற்பாட்டாளராக இயங்கி வந்தார்? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications