ஜெர்மனியில் திடீரென ஒளியுடன் வானில் பறந்த மர்மப்பொருள்.. வேற்றுக்கிரக வாசிகளா?
ஜெர்மனியில் திடீரென வானில் ஒளியுடன் பறந்து சென்ற மர்மப்பொருளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video

ஹோச்சேன்: ஜெர்மனியில் திடீரென வானில் ஒளியுடன் பறந்து சென்ற மர்மப்பொருளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.
வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு உலக விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்துள்ளனர். இதனால் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

வானில் பறந்த மர்மப்பொருள்
அவ்வப்போது தோன்றும் பறக்கும்தட்டுகள் போன்ற பல விஷயங்களும் வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் நகரில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வண்ண ஒளியுடன்
ஜெர்மனியின் ஹோச்சேன் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென வண்ண ஒளியுடன் ஒரு பொருள் வானில் பறந்து சென்றுள்ளது. பந்து போன்று காணப்பட்ட அந்த பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது.

விண்கல்லாக இருக்க வாய்ப்பில்லை
இதனால் ஒளியுடன் பறந்த அந்தப் பொருள் விண்கல்லா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விண்கல் தீப்பற்றி எரிந்தபடிதான் செல்லும் என்பதால் அந்தப் பொருள் விண்கல்லாக இருக்க வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வேற்று கிரக வாசிகளா?
மேலும் அது ஏர் க்ராஃப்ட் இல்லை என ஜெர்மன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு அடித்து தெரிவித்துள்ளது. இதனால் பறந்த அந்த மர்மப் பொருள் சீனாவின் நொறுங்கிய விண்வெளி மையம் அல்லது வேற்றுக் கிரக வாசிகளாக இருக்கும் என கூறப்படுகிறது.

மர்ம பொருள் குறித்து ஆய்வு
இதையடுத்த வானில் தோன்றிய அந்த மர்மப் பொருள் என்ன என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மர்மப்பொருள் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திலும் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications