அதிரவைக்கும் லெபனான் வெடிவிபத்து வீடியோ.. ஒரு கட்டடம் கூட தப்பவில்லை.. உருக்குலைந்த பெய்ரூட் நகரம்!

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன் தினம் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. இந்த விபத்தால் பெய்ரூட் நகரமே எப்படி உருக்குலைந்து காணப்படுகிறது என்பதற்கு இந்த வீடியோ மிகச் சிறந்த ஆதாரமாகும். பார்க்கும்போதே பதற வைக்கிறது.

Recommended Video

    அதிரவைக்கும் லெபனான் வெடிவிபத்து வீடியோ.. ஒரு கட்டடம் கூட தப்பவில்லை.. உருக்குலைந்த பெய்ரூட் நகரம்!

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட 2,750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த இந்த ரசாயனம் இருந்த இடத்திலிருந்து தீப்பிழம்புகளும் கரும்புகைகளும் வெளியாகின. இதை பார்த்த பலர் ஏதோ தீவிபத்து என எண்ணி அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அம்மோனியம் நைட்ரேட்

    அம்மோனியம் நைட்ரேட்

    அப்போது திடீரென பயங்கர சப்தத்துடன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தன. சுமார் 2 கி.மீ. சுற்றளவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 2.50 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். கடல் ஆர்ப்பரித்து வீடுகளை அடித்து கொண்டு செல்வது போல் வெடிவிபத்தால் அங்கிருந்த கட்டடங்கள் சீட்டுக் கட்டு போல் வேகமாக சரிந்தன.

    மனித எலும்புகூடு

    மனித எலும்புகூடு

    இதை பலர் வீடியோ எடுத்ததாகவும் அவர்கள் வீடியோ எடுத்த இடத்தையும் அந்த விபத்து விட்டு வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை எடுத்தவர் பலியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது. சாலைகளில் உள்ள கட்டடங்கள் எல்லாம் மனித எலும்புகூடு போல் மாறி கிடக்கின்றன.

    இடிபாடுகள்

    இடிபாடுகள்

    அது போல் சாலைகளில் ஆங்காங்கே கட்டட குவியல்கள், சேதமடைந்த வாகன குவியல்கள் காணப்படுகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளின் பால்கனி, ஜன்னல்களில் கட்டட இடிபாடுகள், பொருட்கள் சொருகி கிடக்கின்றன. சம்பவ இடத்திற்கு மிக தூரத்தில் இருந்த அலுவலகக் கட்டடங்கள், வீடுகளில் கூட இடிப்பாடுகள் சிதறி கிடந்தன.

    உண்மை நிலவரம்

    உண்மை நிலவரம்

    விண்ணை தொடும் அளவுக்கு கம்பீரமாக காட்சி அளித்த வீடுகளும் எலும்பு கூடு போல் பார்ப்பதற்கே வேதனை அளிக்கும் வகையில் காணப்படுகிறது. இந்த இடிபாடுகளில் மனித உடல்கள் ஏதேனும் இருக்க வாய்ப்பிருக்குமோ என அஞ்சப்படுகிறது. எனினும் அந்த குப்பை கூளங்களை அப்புறப்படுத்தினால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+