மொத்தமாக வெடித்த எரிமலை.. அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்.. ஹவாயை ஆட்டிப்படைக்கும் இயற்கை பேரழிவு
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் நேற்று பெரிய நிலநடுக்கம் இரண்டு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

ஹவாய்: அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் நேற்று பெரிய நிலநடுக்கம் இரண்டு ஏற்பட்டுள்ளது. மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் இந்த தீவில் அதற்கு முதல்நாள்தான் எரிமலை வெடித்தது.
ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கிறது. அந்த வகையில் கிலாயூ என்ற எரிமலை நேற்று வெடித்தது.
கடந்த வியாழக்கிழமையில் இருந்தே இந்த எரிமலை மிகவும் மோசமான நிலையில் நெருப்புக்கு குழம்புகளை கக்கிக் கொண்டு இருந்தது. தற்போது மொத்தமாக வெடித்து லாவாக்கள் வெளியே வந்துள்ளது.
|
என்ன நடந்தது
இது மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள். இதற்காக அமெரிக்க அரசு மீட்பு படையை அனுப்பி இருந்தது. மக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வரும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் சில மக்கள் ஏற்கனவே அவர்கள் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்கள்.
|
நிலநடுக்கம்
இந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வீடுகளை காலி செய்யும் போது அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. முதல் நிலநடுக்கம் இதுதான். இந்த நிலநடுக்கம் சரியாக 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இரவு 11.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் அந்த நிலநடுக்கம் 6.9 ஆக அதிகரித்தது. இதனால் வீடுகளை காலி செய்து கொண்டு இருந்த மக்கள் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகினர்.
|
இரண்டாவது
ஆனால் பிரச்சனை அதோடு முடியவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சரியாக 7.4 ரிக்டர் அளவில் பதிவானது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும் இது. இதனால் தங்கள் வீடுகளை காலி செய்து கொண்டு இருந்த மக்கள் ஆங்காங்கே தங்கும் நிலைக்கும் ஆளாகினர்.
|
இதனால்
எரிமலை வெடிப்பு காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருந்து முக்கால்வாசி கட்டிடங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. எல்லாம் இடிந்து மொத்தமாக தரைமட்டமாகி உள்ளது. அதேபோல் இதனால் எத்தனை பேர் காயமடைந்தார்கள், எத்தனை பேர் மரணமடைந்தார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications