‘ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக’ வாழ ஆசைப்பட்ட இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?
நியூயார்க்: ஓவ்வொருத்தருக்கும் ஒரு பீலிங். அந்தவகையில், இளவரசராக வாழ ஆசை ஏற்பட்ட அமெரிக்க இளைஞர் ஒருவர், தனது முயற்சிகளை வீடியோவாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் 49-வது சிறந்த உடையணியும் ஆணாக இரண்டு வயதாகும் இளவரசர் ஜார்ஜை, பிரிட்டனின் ஜி.க்யு. பத்திரிகை சமீபத்தில் பாராட்டியுள்ளது. ஜார்ஜ் அணிந்த உடைகளும், ஷூக்களும் உலகின் பல மூலைகளிலும் டிரெண்ட் ஆகியுள்ளது.
இதனால் பெரிதும் கவரப்பட்ட மேக்ஸ் க்னோப்லாச் (23) என்ற பத்திரிகையாளருக்கு, ‘தானும் இளவரசராக இருந்தால் எப்படி இருக்கும்?' என்ற ஆசை உண்டானது.

இளவரசர் ஆசை...
அதனைத் தொடர்ந்து, தனது ஆசையை தானே நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தார் ராஜ வம்சத்தில் பிறக்காத மேக்ஸ். இதற்காக அவர் தேர்வு செய்தது உடைகளைத் தான்.

உடைகள்...
இணையத்தின் உதவி கொண்டு இளவரசர் ஜார்ஜ் அணிந்த உடைகளிலேயே சிறப்பான உடைகள் சிலவற்றை அவர் தேர்வு செய்தார். அதே போன்ற உடைகள் தனது சைஸிற்கு கிடைக்காததால், அவற்றைத் தானே உருவாக்கினார் மேக்ஸ்.

நகர உலா...
பின்னர், அந்த உடைகளை தினம் ஒன்றாக அணிந்து நியூயார்க் நகர சாலைகளில் அவர் வலம் வந்தார். யாராவது தன்னை அடையாளம் கண்டு, ஜார்ஜ் போல் உடையணிந்து உள்ளீர்கள் என கேள்வி கேட்பார்கள் என்ற ஆர்வத்தில் அவர் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் சுற்றி வந்தார்.

சூடா இல்லை...
ஆனால், யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. இளவரசர் ஜார்ஜின் தங்கை பிறந்தபோது அவர் அணிந்திருந்த நீல ஸ்வெட்டரை அணிந்து, 91 டிகிரி வெயிலில் நின்றிருந்த போது மட்டும், அந்த வழியே சென்றவர் ‘சூடாக இல்லை?' எனக் கேட்டுச் சென்றாராம்.

ஜாலி...
முடிந்தவரை இளவரசர் ஜார்ஜ் போலவே உடையணிந்து ஒரு வாரகாலம் இருந்துள்ளார் மேக்ஸ். தனது முயற்சியை மக்கள் கண்டு கொள்ளவில்லை என்ற போதும், ‘இளவரசனைப் போல எல்லோரும் வாழ முயற்சித்துப் பார்க்க வேண்டும், இது ஜாலியாகத்தான் இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார் மேக்ஸ்.
வீடியோ...
இளவரசராக வாழும் தனது முயற்சிகளைப் பதிவு செய்து, அதனைத் தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார் மேக்ஸ். சில இடங்களில் இளவரசர் ஜார்ஜைப் போலவே ஆக்ஷனும் செய்துள்ளார் இவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications