உன் காதலன் ஆவி என்மேலதான் இருக்கு: பெண்ணை 15 ஆண்டுகளாக குகையில் மறைத்து பலாத்காரம் செய்த மந்திரவாதி!
இந்தோனேஷியாவில் 13 வயதில் கடத்திய சிறுமியை 15 ஆண்டுகளாக மந்திராவதி ஒருவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 13 வயதில் கடத்திய சிறுமியை 15 ஆண்டுகளாக மந்திராவதி ஒருவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமி ஒருவரை அவரது பெற்றோர், உடல்நலக்குறைவு காரணமாக அப்பகுதியில் உள்ள மந்திரவாதியிடம் அழைத்து சென்றனர். அப்போது அந்த மந்திரவாதி சிறுமிக்கு பூஜை செய்ய வேண்டியுள்ளதால் அவரை தன்னிடம் விட்டுவிட்டு பின்னர் வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பி சிறுமியின் பெற்றோரும் அவரை மந்திரவாதியிடமே விட்டு சென்றுள்ளனர். பின்னர் வந்து கேட்டபோது சிறுமி தலைநகர் ஜகார்த்தாவுக்கு வேலை தேடி சென்றுள்ளார் என கூறியுள்ளார்.

நம்பிய பெற்றோர்
மந்திரவாதி கூறியதை கேட்டு அப்படியே சென்றுவிட்டனர் சிறுமியின் பெற்றோர். ஆனால் சிறுமியிடம் இருந்து எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

28 வயது பெண்ணாக மீட்பு
சுமார் 15 ஆண்டுகள் கழிந்தோடிவிட்டன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மந்திரவாதியின் வீட்டின் அருகே உள்ள குகையில் இருந்து அந்த சிறுமி 28 வயது பெண்ணாக மீட்கப்பட்டுள்ளார்.

திடுக்கிடும் தகவல்
28 வயதான அந்த பெண்ணை போலீசார் ஹெச் என அழைக்கின்றனர். ஹெச்சிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்ஜென்ம காதலர்
அதாவது தன்னை அருகில் உள்ள குகையில் அடைத்த அந்த மந்திரவாதி அம்ரின் என்ற இளைஞர் முன்ஜென்மத்தில் அந்த சிறுமியின் பாய் பிரண்ட்டாக இருந்ததாக கூறி ஒரு போட்டோவை காண்பித்து நம்ப வைத்துள்ளார்.

காமவெறியை தீர்த்த மந்திரவாதி
பின்னர் அந்த இளைஞரின் ஆன்மா தன்னுள் புகுந்திருப்பதாகவும் அவர் சிறுமியுடன் செக்ஸ் உறவு வைக்க விரும்புவதாகவும் கூறி கடந்த 15 ஆண்டுகளாக அவரை செக்ஸ் அடிமையாக வைத்து தனது காமவெறியை தீர்த்து வந்துள்ளார்.

இரவில் குடிசையில்
பகல் நேரம் முழுவதும் ஹெச் குகையில் அடைத்து வைக்கப்படுவார் என்றும் இரவு நேரத்தில் மட்டும் மந்திரவாதியின் வீட்டின் அருகே உள்ள குடிசையில் தங்க வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமுறை கருக்கலைப்பு
மேலும் பல முறை கருத்தரித்த அவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகளையும் வாங்கி கொடுத்துள்ளார் அந்த மந்திரவாதி. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மந்திரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என்றும் மேலும் பல தண்டனைகள் கிடைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
மேலும் ஹெச்சின் சகோதரி அந்த மந்திரவாதியின் மகனை திருமணம் செய்துள்ளதால், இதில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட ஹெச்சின் குடும்பத்தினர் மந்திரவாதியின் மேல் உள்ள அச்சத்தால் எதையும் கூற மறுக்கிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

15 ஆண்டுகளாக பலாத்காரம்
முன் ஜென்ம காதலனின் ஆவி தன் மேல் இருப்பதாக கூறி 13 வயதில் கடத்திய சிறுமியை 15 ஆண்டுகளாக மந்திரவாதி ஒருவர் செக்ஸ் அடிமையாக குகையில் மறைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications