காதலுக்காக கண்களில் பச்சைக் குத்திய பெண்.. காதலும் போச்சு.. கண்ணும் போச்சு
கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.
டொரண்டோ: கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். கேட் காலிங்கர் என்ற அந்த பெண் தற்போது தன்னுடைய பார்வையை இழந்துள்ளார்.
அந்த பெண் தன்னுடைய காதலன் எரிக் பிரவுன் தனது கண்களில் பச்சை குத்திக் கொண்டதால் அவரும் அப்படி பச்சைக் குத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இதுவே இவர்கள் காதலுக்கு இடையில் பிரச்சனையாகி இருக்கிறது.
கண்களில் பச்சை குத்தும் இது போன்ற புதிய டிரெண்ட் தற்போது உலகம் முழுக்க வைரல் ஆகி வருகிறது. தற்போது அந்த பெண் இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.

கண்களில் பச்சைக் குத்தும் ரகசியம்
தற்போது கண்களில் கலர் கலராக பச்சை குத்துவதுதான் டிரெண்ட். இது மிகவும் கடினமான வேலை ஆகும். கண்கள் வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள். என்னதான் வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இதைச் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும். மேலும் கண்களை சில மாதத்திற்கு மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

காதலுக்காக பச்சை குத்திய பெண்
கனடாவை சேர்ந்த கேட் காலிங்கர் என்ற பெண் தன்னுடைய காதலன் எரிக் பிரவுன் விருப்பத்தின் பேரில் கண்களில் பச்சைக் குத்த முடிவு செய்து இருக்கிறார். அவரது காதலன் தனது கண்களில் 'பிங்க்' நிறத்தில் பச்சை குத்தி இருக்கிறார். ஆகவே இந்த பெண் தனது கண்களில் 'பர்பிள்' நிறத்தில் பச்சை குத்த முடிவு செய்து இருக்கிறார். மேலும் அவர் காதலனே பச்சை குத்தி விடுவதாகவும் கூறி உள்ளார்.
கண்களில் வீக்கம்
இந்த நிலையில் பச்சை குத்திய பின் அந்த பெண்ணுக்கு கண்களில் சில நாளில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கண் மட்டும் 'பர்பிள்' நிறத்தில் வீக்கம் அடைந்து இருக்கிறது. மேலும் தினமும் அவருக்கு அதே கலரில் கண்ணீரும் வந்துள்ளது. அவரது காதலன் பச்சை குத்தும் போது முக்கியமான பாதுகாப்பு திரவம் ஒன்றை கலக்க மறந்துவிட்டதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பார்வை போனது
தற்போது மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இல்லையென்றால் மற்றொரு கண்ணும் இதன் காரணமாக பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறதாம். இந்த பிரச்சனை காரணமாக காதலர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு பிரிந்து இருக்கிறார்கள். மேலும் கேட் தன் முன்னாள் காதலன் எரிக் மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications