எங்கிருந்தோ வந்தான்.. எனக்குக் குழந்தை தந்தான்.. "ஸ்பெர்ம்" டொனாரைத் தேடிக் கண்டுபிடித்து மணந்த பெண்

Subscribe to Oneindia Tamil

விக்டோரியா: அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துள்ளது. தனக்கு ஐவிஎப் மூலம் குழந்தைப் பேறு ஏற்படக் காரணமாக இருந்த, விந்தணு தந்து உதவியரைத் தேடிக் கண்டுபிடித்து அவரையே திருமணம் செய்துள்ளார் ஒரு பெண்.

இந்த இருவருக்கும் இடையே சோதனைக் குழாய் மூலம் பிறந்த மகள், இக்கல்யாணத்திற்கு சாட்சியாக மணப்பெண் தோழியாக இருந்து அசத்தியுள்ளார்.

விக்டோரியாவைச் சேர்ந்தவர்கள் அமினா ஹார்ட் மற்றும் ஸ்காட் ஆண்டர்சன். இவர்கள்தான் தற்போது திருமணத்தின் மூலம் கணவன் மனைவியாக இணைந்துள்ளனர். இவர்களது குழந்தை லைலா.

விந்தணு தானம்...

விந்தணு தானம்...

ஆண்டர்சன் ஒரு விந்தணுக் கொடையாளி ஆவார். ஹார்ட்டுக்கு முதல் கணவர் மூலம் இரு மகன்கள் உள்ளனர். அதன் பின்னர் அவருக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு தட்டிக் கொண்டே போனது. இதையடுத்து விந்தணு தானம் பெற்று கருத்தரிக்க முடிவு செய்தார் ஹார்ட். அப்போதுதான் ஆண்டர்சனின் விந்தணு கிடைத்து, அதன் மூலம் சோதனைக் குழாய் மூலம் கருத்தரித்தார் ஹார்ட். அவருக்கு அழகிய பெண் குழந்தை லைலா பிறந்தாள்.

பெண் குழந்தை...

பெண் குழந்தை...

2012ம் ஆண்டு இது நடந்தது. அதுவரை ஆண்டர்சனை அவர் சந்தித்ததில்லை. ஆனால் பெண் குழந்தை பிறந்ததும் ஆண்டர்சனை பார்க்க விரும்பினார் ஹார்ட். இதையடுத்து அவரைத் தேடத் தொடங்கினார். அந்த சமயத்தில் தனது முதல் கணவரை அவர் பிரிந்து விட்டிருந்தார். எனவே தனது மகள் தந்தை இல்லாமல் வளரக் கூடாது என்று விரும்பிய அவர் ஆண்டர்சனையே மணக்க விரும்பினார்.

ஆர்வம்...

ஆர்வம்...

ஆன்லைன் மூலம் ஆண்டர்சன் இருப்பிடத்தை அவர் கண்டுபிடித்தார். அவரது முகத்தையும் முதல்முறையாக பார்த்தார். அதேசமயம், தன்னுடைய விந்தணு மூலம் பிறந்த குழந்தையைப் பார்க்க ஆண்டர்சனும் ஆவலாக இருந்தது தெரிய வந்தது. பிறகென்ன இருவரும் சந்தித்தனர். நெகிழ்ச்சியுற்றனர். லைலாவைப் பார்த்து வியந்து மகிழ்ச்சி கொண்டார் ஆண்டர்சன்.

திருமணம்...

திருமணம்...

இதையடுத்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாகியுள்ளனர். அவர்களுடைய முறைப்படியான குழந்தையாக லைலா மாறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+