'எனக்கு 26 வயதில் 22 குழந்தைகள் பிறந்துள்ளன'.. ஜார்ஜியாவை அதிர வைத்த இளம் பெண் பேட்டி
திபிலிசி: ஜார்ஜியா நாட்டில் 26 வயதில் 22 குழந்தைகளுக்கு இளம் பெண் ஒருவர் தாயாகி இருக்கிறார். அது எப்படி திமிங்கலம் என்று கேட்கலாம். இதே இப்போது பார்த்துவிடுவோம்.
அந்த காலத்தில் 8 பிள்ளை, ஏழு பிள்ளை என முன்னோர்கள் பெற்றார்கள். ஐந்துபிள்ளை என்பது பரவலாக இருக்கும். ஆனால் இன்றைக்கு ஒரு குழந்தை பெற்றெடுப்பதே கடினமாக உள்ளது .அதேநேரம் இரண்டுக்கு மேல் குழந்தை பெற்றெடுத்தால் அவர்களை வளர்ப்பது, படிக்க வைப்பது சொத்து சேர்ப்பது போன்றவை மலைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக ஸ்கூல் பீஸை நினைத்தால் தலையே சுற்றிவிடும். இதுதான் நம்மூர்களில் இன்றைய எதார்த்தம்.

இந்நிலையில் ஜார்ஜியா நாட்டில் 26 வயதில் 22 குழந்தைகளுக்கு இளம் பெண் ஒருவர் தாயாகி இருக்கிறார். இதை கேட்டு பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடு ஜார்ஜியா.. இந்த நாட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்டினா ஓஸ்டுர்க் என்ற 26 வயது பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் காலிப் ஓஸ்டுர்க் (வயது 58). இவர் ஜார்ஜியாவில் பல ஓட்டல்களை நடத்தி வருகிறார். இவர் அங்கு கோடீஸ்வரராக உள்ளார்.
இந்நிலையில் கிரிஸ்டினாவுக்கு வித்தியாசமான ஆசை ஒன்று வந்தது. அதாவது 105 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. இதற்கு அவரது கணவரும் சம்மதித்து விட்டார். முதலில் பிறந்த குழந்தை மட்டுமே நேரடியாக அவருக்கு பிரசவத்தில் பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 9 வயது ஆகிறது.
அதன்பிறகு அனைத்து குழந்தைகளையும் வாடகை தாய் முறையில் பெற்றுக் கொள்ள முடிவு செய்தார். தற்போது வரை கிறிஸ்டினா 22 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார். இவருக்கு 105 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை உள்ளதாம். அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளாராம். தனது 22 குழந்தைகளுடன் கிறிஸ்டினா எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் குழந்தைகளின் பெயர் வயது குறித்து குழந்தைகளே கூறுகிறார்கள்.
இதனிடையே கிறிஸ்டினா கூறுகையில், "எனக்கு 26 வயதில் 22 குழந்தைகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் வாடகைத் தாய் மூலம் ஒரு வருட இடைவெளியில் பிறந்தவர்கள் - எனக்கு 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள ஆசை. 100 குழந்தைகளை தாண்டினால், குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்துவேன்.. அதுவரை நிறுத்த மாட்டேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications