ஈரான் போருக்கு நடுவில் இந்தியாவுக்கு வரும் அப்பாஸ் அராக்சி.. திடீர் பயணம் எதற்காக?
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அடுத்த வாரம் டெல்லிக்கு வரவுள்ளார். மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் BRICS வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் பங்கேற்க உள்ளார். அப்பாஸ் அராக்சி-யின் வருகை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஈரான் போர் தாக்குதல் குறைந்தாலும், ஹார்முஸ் வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை வரவில்லை. இதனால் நாளுக்கு நாளுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு அச்சம் அதிகரித்துள்ளது. இன்றளவு எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த பயணம் சாதாரண அரசியல் சந்திப்பு இல்லை என மேற்கத்திய நாடுகள் பார்க்கின்றன. காரணம், கடந்த மாதம் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான், கத்தார், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார். இதை தொடர்ந்து இந்தியாவுக்கு வருகிறார்.
இதனால், அப்பாஸ் அராக்சி இந்த சந்திப்பு இந்தியா - ஈரான் உறவுகளிலும், BRICS அமைப்பின் எதிர்கால அரசியல் பங்களிப்பிலும் முக்கிய திருப்பமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் இந்தியாவுக்கான எரிபொருள் சப்ளையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் இந்த சந்திப்பு பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் BRICS கூட்டமைப்பில் இணைந்த ஈரான், அதன் பின்னர் நடைபெறும் முக்கிய கூட்டங்களுக்கு தொடர்ந்து உயர்மட்ட பிரதிநிதிகளை அனுப்பி வருகிறது. உலக அரசியலில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக உருவாகும் சக்திவாய்ந்த கூட்டணியாக BRICS-ஐ ஈரான் பார்க்கிறது.
மேலும் அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், BRICS நாடுகள் தலையிட்டு சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஈரானுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தற்போது BRICS தலைமை பொறுப்பில் இருப்பதால், இந்த விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதையும் ஈரான் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. அதனால், டெல்லியில் நடைபெறும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் சர்வதேச அளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள BRICS உச்சி மாநாட்டிற்கான ஆலோசனைகளும் இங்கு நடைபெறவுள்ளன.
இந்த சூழலில், மேற்கு ஆசிய பிரச்சினைகள் குறித்து BRICS நாடுகள் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க இந்தியா முயற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகின் வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளை இணைக்கும் அமைப்பாக BRICS மாறிவரும் நிலையில், அதன் அரசியல் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
மேற்கு ஆசிய பதற்றம் குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இடையே ஆலோசனைகள் நடைபெற்றது.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications