குடும்பங்களைகூட விட்டுவைக்கலையா இவங்க! காலநிலை மாற்றத்திற்கு எதிரா பெரிய போரையே நடத்த போறாங்க!
அபுதாபியில் உள்ள குடும்ப பராமரிப்பு அமைப்பான எஃப்சிஏ-வும் அந்நாட்டின் காலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் தன்னுடைய பங்களிப்பை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களில் துபாயும் ஒன்றாகும். இங்கு சிஓபி28 மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காலநிலை மாற்றத்திற்கு எதிராக பல்வேறு முக்கிய திட்டங்களை இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அபுதாபியில் உள்ள குடும்ப பராமரிப்பு அமைப்பான எஃப்சிஏ, தானும் காலைநிலை மாற்றத்திற்கு எதிராகவும், சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

இதற்காக அது ஐக்கிய அரபு அமீரகத்தின் இன்டிபென்டன்ட் காலநிலை மாற்ற முடுக்கிகளுடன் (UICCA) இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் இணைந்து மக்கள் மத்தியில் சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வை உணர்வுகளாக வளர்க்க உறுதிப் பூண்டிருக்கின்றனர். மேலும், இந்த கோட்பாட்டை நோக்கி மக்களை அணி திரட்டவும் அவர்கள் முயற்சி செய்வார்கள். இதுவே எஃப்சிஏ-வின் முக்கிய இலக்காகும். இதற்காக எஃப்சி மற்றும் யுஐசிசிஏ சில திட்டங்களை வகுத்து இருக்கின்றது.
சமூக ஈடுபடு மற்றும் காலநிலை நடவடிக்கை:
சமூகம் சார்ந்த சில நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டில் அபு தாபி முழுவதும் நடைபெற இருக்கின்றன. இந்த கூட்டம் மக்களை அணி திரட்ட மட்டுமல்ல, சில ஒர்க்ஷாப்புகளும் நடத்தப்பட இருக்கின்றது. குறிப்பாக, இதுதவிர, காலா நிலை மாற்றத்திற்கு எதிரான பேரணி, விழிப்புணர்வு பேச்சுகள் மற்றும் பல நடவடிக்கைகளை அங்கு செய்ய எஃப்சிஏ மற்றும் யுஐசிசிஏ திட்டமிட்டு இருக்கின்றது.
சிஓபி 28 மாநாட்டில் நடைபெற்ற கூட்டணி தொடக்க விழா:
சிஓபி 28 மாநாட்டில் பல நிறுவனங்கள் கூட்டணி அமைத்தன. ஐக்கிய அரபு அமீரகத்தின் மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்கும் முயற்சிக்கு ஏற்ப அந்நாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டணியானது நிகழ்வானது விழா போல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், யுஐசிசிஏ மற்றும் எஃப்சிஏ இவர்களின் கூட்டணியும் ஓர் விழாவைபோல் நடைபெற்றது. இந்த இணைவு நிகழ்வானது யுஐசிசிஏ தலைவர் ஷேக்கா ஷம்மா பின்ட் சுல்தான் பின் கலீஃபா அல் நஹ்யான் மற்றும் எஃப்சிஏ தலைவர் டாக்டர் புஷ்ரா அல் முல்லா ஆகியோரின் தலைமையிலேயே நடைபெற்றது. இந்த கூட்டணி, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் காலநிலை நடவடிக்கையை நோக்கிய கூட்டுப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
அபுதாபியின் இயற்கை சூழலை மேம்படுத்த திட்டம்:
எஃப்சிஏ மற்றும் யுஐசிசிஏ ஆகிய இரண்டின் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கை உடன் இருக்கின்றனர். எஃப்சிஏ-வின் பயனாளிகளுக்கு தனித்துவமான மற்றும் அதிவேக அனுபவங்களை வழங்க, அபுதாபியின் இயற்கை அழகை மேம்படுத்த தங்களின் இந்த அணுகுமுறைகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதிலேயே அவர்கள் அதிகம் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இவர்களின் குறிக்கோள் என்னவென்றால், தனிநபர்கள், குடும்பங்கள் என பாராபட்சம் இன்றி சுற்றுச்சூழலின் நல்வாழ்வை பேணிகாக்க ஒருமித்தமாக ஒன்றினைய வேண்டும் என்பதே ஆகும். எஃப்சி மற்றும் யுஐசிசிஏ இடையேயான ஒத்துழைப்பு, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் விதமாகவும் செயலாற்றும் என நம்பப்படுகின்றது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications