தீ தீ தித்திக்கும் தீ.. எரிச்சு விளையாடி ஒரு கல்யாணம்.. வேறெங்கே அமெரிக்காவில்தான்
உடையில் தீயை பற்ற வைக்க சொல்லி மணபெண்கள் மகிழ்ந்தார்கள்.
அயோவா, அமெரிக்கா: இப்படி ஒரு விசித்திரமான, புதுமையான, விபரீத கல்யாணத்தை இந்த உலகமே பார்த்திருக்காது.
அமெரிக்காவில் அயோவா மாநிலத்தை சேர்ந்த 2 தோழிகள் செய்த வேலைதான் இது. ஏப்ரில் சோய் மற்றும் பெத்தனி பைர்னஸ் என்ற இவர்கள் நீண்ட கால தோழிகள் ஆவார்கள். புதுசு புதுசா எதையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.

புது ஐடியா
அதனால தங்களது கல்யாணத்தையும் புது தினுசா செய்து அசத்தணும்னு நினைச்சாங்க. அதன்படி ஒரு ஐடியாவையும் ரெடி பண்ணி வச்சிக்கிட்டாங்க. போன வாரம் இவங்களுக்கு கல்யாணம். அன்றைய தினம், தங்கள் கணவர்களை இரு பெண்களும், ஒரு குன்று போல இருக்கும் இடத்துக்கு கூட்டி சென்றார்கள்.

குன்று உச்சி
அந்த குன்றுக்கு பெயர் வெர்னான். கல்யாண பெண் கூப்பிடவும் மாப்பிள்ளைகளும் பின்னாடியே போய்விட்டார்கள். கூடவே தங்கள் நண்பர்களையும் அழைத்து சென்றார்கள். அந்த குன்றின் உச்சியில் 2 பெண்களும் நின்று கொண்டார்கள்.

போட்டோவுக்கு போஸ்
பிறகு தாங்கள் அணிந்திருக்கும் கல்யாண ஆடையில் தீ வைத்து விடுமாறு கணவர்களை இருவரும் கேட்டார்கள். இதற்கு 2 கணவர்களும் ஒத்து கொண்டு, மனைவி விரும்பியபடியே அவர்களது திருமண உடையில் நெருப்பை பற்ற வைத்தார்கள். உடனே மணப்பெண் உடலில் இருந்த ஆடை பற்றிக் கொண்டு கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அதை பற்றியெல்லாம் கவலைப்படாத மணப்பெண்களோ போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். அடுத்த சில நிமிடத்தில் தீப்பற்றிய எரிந்த அந்த மேலங்கி கழண்டு விழுந்தது.

செல்போனில் படம்
உடனே இருவரும் உற்சாக டான்ஸ் போட்டார்கள். சந்தோஷத்தில் முத்தமிட்டு கொண்டார்கள். இதனை அந்த பகுதி மக்கள் சுற்றி நின்று வேடிக்கையும் பார்த்து நின்றதுடன், அவர்களும் தங்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டார்கள். இப்படி கல்யாண பெண்கள் வித்தியாசம் என்ற பெயரில் செய்து கொண்ட திருமணமானது உலகமெங்கம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications