ஆப்கானிஸ்தானில் பக்ரீத் தொழுகையின்போது குண்டுவெடிப்பு: மாகாண ஆளுநர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள லோகார் மாகாணத்தில் இருக்கும் மசூதி ஒன்றில் இன்று காலை குண்டு வெடித்ததில் அம்மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் பலியானார்.
ஆப்கானிஸ்தானின் லோகார் மாகாணத்தில் உள்ள புல் இ ஆலம் மசூதியில் பக்ரீத் பண்டியை முன்னிட்டு இன்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் சிறப்புரை நிகழ்த்தவிருந்தபோது அங்கிருந்த மேஜைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.
இதில் ஜமால் உடல் சிதறி பலியானார். இந்த சம்பவத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காபூலின் தெற்கில் உள்ள லோகாரின் பெரும்பாலான பகுதிகள் தாலிபான்களின் பிடியில் உள்ளன.
ஆனால் இன்று காலை நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் தான் ஜமால் லோகார் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு மற்றொரு கிழக்கு மாகாணமான கோஸ்டின் ஆளுநராக இருந்தார்.
பாகிஸ்தான் தாலிபான்களின் கமாண்டர் லதிப் மெஹ்சூதை அமெரிக்க படைகள் கைது செய்த சில நாட்களில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications