ஆப்கன்: தமிழக பாதிரியாரை கடத்த உதவிய 3 தாலிபன் தீவிரவாதிகள் கைது
காபூல்: தமிழக பாதிரியார் கடத்தப்பட்ட வழக்கில் தாலிபன் அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப் பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் ப்ரேம்குமார் என்பவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டார். அங்கு அவர் பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் சேவையில் ஈடுபட்டதாகவும், இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் கடத்தப் பட்டதாக சந்தேகிக்கப் படுகிறது.
தமிழக பாதிரியாரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதனையடுத்து காபூலிலுள்ள இந்திய தூதர், ஹெராத் நகரிலுள்ள துணைத் தூதர் ஆகியோர் ஆப்கன் அரசுடன் இணைந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், பாதிரியார் கடத்தப்பட்ட விவகாரத்தில் இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளதாக ஆப்கன் அரசு அறிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் தாலிபன் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் பாதிரியார் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications