ஆப்கானிஸ்தான் கிராமத்தின் மீது மலையே சரிந்தது! பலியானோர் எண்ணிக்கை 2100ஆனது!!
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவியல் குவியலாக பலியானோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பதகசான் என்ற நகரின் அருகே உள்ள பரீக் என்ற கிராமத்தின் அருகேயுள்ள ஒரு சிறிய மலை தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக சரிந்து ஒரு கிராமத்தின் மேல் விழுந்தது.
இதனால் அந்த கிராமத்தில் இருந்த சுமார் 300 வீடுகள் பூமியில் புதைந்தன. இதில் முதலில் 350 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அங்கு பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவியல் குவியலாக பிணங்கள்
இதுதொடர்பாக பதகசான் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் நவீத் போரோட்டன், அளித்த பேட்டியில், பரீக் கிராமத்தில் நேரிட்ட நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 2,100 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என கூறினார்.

அதிபர் இரங்கல்
நிலச்சரிவில் பரீக் கிராமமே புதைந்து போய் 2,100 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு அந்நாட்டின் அதிபர் ஹமீது கர்சாய் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

ஏக்கம், பரிதவிப்பு
நிலச்சரிவில் சிக்கியவர்கள் யாராவது உயிரோடு கிடைத்து விட மாட்டார்களா என்ற ஏக்கத்துடனும், தவிப்புடனும் உள்ளூர் மக்களும் மீட்புப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு, மண்வெட்டி கொண்டு இடிபாடுகளை தோண்டிப்பார்ப்பது நெஞ்சை உருக்கும் செயலாக அமைந்துள்ளது.

4 ஆயிரம் பேர் இடப்பெயர்வு
இதற்கிடையே நடந்த நிலச்சரிவில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீது தான் இப்போது நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்தி வருகிறோம் என ஐ.நா. சபை கூறியுள்ளது.

மீண்டும் நிலச்சரிவு?
இந்த நிலையில் அங்கு மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications