எகிறி அடிக்கும் தாலிபான்கள்.. 'இனி அவ்வளவுதான்.. அவரே ஒரு பொம்மை'.. இம்ரான்கானை வறுத்தெடுத்து ட்வீட்

இம்ரான்கானுக்கு தாலிபான்கள் பதிலடி தந்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

காபூல்: இவர் யார் எங்கள் விவகாரத்தில் தலையிடுவதற்கு? நாங்கள் யார் விவகாரத்திலும் தலையிடுவதில்லை.. இம்ரான் கான் ஒரு பொம்மை" என்று தாலிபான்கள் விமர்சித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர்.. ஆனால் அதிகாரத்தை வரையறுப்பதில், தாலிபான் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

பிறகு ஒரு வழியாக இடைக்கால பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது.. முல்லா கனி பராதர் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்..

 பிளவு - குழப்பம்

பிளவு - குழப்பம்

ஆனால், ஆப்கானிஸ்தான் துணை பிரதமர் முல்லா கனி பராதர், பாகிஸ்தான் ஆதரவு ஹக்கானிகளால் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது.. இதனால் தாலிபான்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது... பராதர் ஹக்கானி, தலைவர்களால் சுட்டு கொல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றன.. தாலிபான்கள் இதை மறுத்தாலும், பராதர் இன்னும் மக்கள் முன் நேரடியாக தோன்றவில்லை...

 அமைச்சரவை

அமைச்சரவை

அதனால் ஆப்கனில் அமைச்சரவையை அறிவித்தும்கூட, அவர்களால் இடைக்கால அரசை அமைக்க முடியவில்லை.. இப்படி தாலிபான்களுக்கு இடையிலேயே பஞ்சாயத்து ஓடி கொண்டிருக்கிறது.. தினம் தினம் குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.. மக்களும் அல்லோகலப்பட்டு வருகின்றனர்.. வறுமையிலும் உழன்றுள்ளனர்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இப்படிப்பட்ட சூழலில் தலிபான்களை ஆதரிக்க உலக நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றன...
"இதனிடையே அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தலிபான்கள் கொடுக்காவிட்டால், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்திருந்தார்.. இது தொடர்பாக அவர் ஒரு பேட்டி தந்திருந்தார்..

 உள்நாட்டு போர்

உள்நாட்டு போர்

அதில், "தாலிபான்கள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும், மற்ற பயங்கரவாத அமைப்புகள், ஆப்கன் மண்ணை, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும். தாலிபான்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தர வேண்டும்... இல்லாவிட்டால் உள்நாட்டுப் போர் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது... அப்படி மட்டும் நடந்துவிட்டால், ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு ஏற்ற இடமாகவே மாறி போய்விடும்.. அது ஆப்கனுக்கு மட்டுமின்றி, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும் ஆபத்து" என்று கூறியிருந்தார்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை


பொம்மை அரசாங்கத்தை வைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியாது என்று இம்ரான்கான் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியதுமே, தாலிபான்கள் பொங்கி எழுந்துவிட்டனர்.. இம்ரான் கானை ஏகத்துக்கும் விமர்சித்து வறுத்தெடுத்துள்ளனர். இதற்குதான் பதிலடி கருத்தும் தந்துள்ளனர்.. தாலிபான் செய்தி தொடர்பாளர் நயா தவுர் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

Recommended Video

    Taliban அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்த China, Pakistan சிறப்பு தூதர்கள்.. உருவாகும் புதிய கூட்டணி?
     பொம்மை

    பொம்மை

    அதில், "இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கிடையாது.. அவரே ஒரு பொம்மை தான். எங்க விவகாரத்தில் யாரும் தலையிடதேவையில்லை.. அதே மாதிரி நாங்களும் யார் விவகாரத்திலும் தலையிட மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார். இதேபோல, தாலிபான் செய்தித்தொடர்பாளர் நயா தவுர் மற்றொரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "இம்ரான் பற்றி என்ன சொல்றது? அவர் ஆப்கானிஸ்தானில் எல்லாரையும் உள்ளடக்கிய அரசாங்கங்கள் தேவை என்றுதானே செல்கிறார்.. ஆனால் அவங்க நாட்டு பாகிஸ்தானிலேயே பெரும் பிரச்சனை இருக்கிறதே..

     பரபரப்பு

    பரபரப்பு

    அவங்களே ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்... இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரும் இல்லை.. பாகிஸ்தான் தேசத்தின் ஒப்புதல் இல்லாமலே அவர் பதவிக்கு வந்து உட்கார்ந்து கொண்டு எங்களை ஏன் வம்பிழுத்து கொண்டு வருகிறார்" என்று கேட்டார். இப்படி இம்ரான் கானை நேரடியாகவே ட்வீட் போட்டும் பேட்டி தந்தும் விமர்சித்து வருவதை உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+