மனைவியா இருந்தாலும் உடலுறவில் இந்த விஷயத்தை செய்யக்கூடாது.. தாலிபான்கள் போட்ட தடை! எதுக்கு தெரியுமா
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு விஷயங்களில் கட்டுப்பாடு மற்றும் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சொந்த மனைவியாக இருந்தாலும் கூட உடலுறவின்போது குறிப்பிட்ட சில விஷயத்தை செய்யக்கூடாது என்று தாலிபான்கள் அதிரடி உத்தரவு போட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்கள் என்பவர்கள் யார் என்றால் இஸ்லாமில் போதிக்கப்பட்ட கருத்துகளை தீவிரமாக பின்பற்றுபவர்கள். இவர்கள் கடந்த 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர்.

இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் கடந்த 2021ல் அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதும் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததை அறிந்த பொதுமக்கள் நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இதனை பார்த்த தாலிபான்கள் நாங்கள் முன்புபோல் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம். எங்களை நம்புங்கள் என கூறினர்.
இதையடுத்து ஏராளமான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் மனநிலையை மாற்றி கொண்டனர். ஆனால் தாலிபான்களின் வார்த்தை என்பது வெறும் வாய்மொழியாக மட்டுமே அமைந்தது. ஏனென்றால் தாலிபான்கள் மொத்த நாட்டையும் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு தங்களின் வேலைகளை காட்ட தொடங்கினர். ஆண்கள், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர்.
குறிப்பாக பெண்களை வீட்டுக்குள்ளே முடக்கும் செயலில் தாலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா மட்டுமே அணிய வேண்டும். பூங்கா, ஜிம் செல்லக்கூடாது. ஹோட்டலில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பது உள்பட பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் மொத்தம் 35 வகையான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் உடலுறவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது Sodomy-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Sodomy என்பது இயற்கைக்கு மாறாக உறவு வைத்து கொள்வதாகும். இதில் மனைவியாக இருந்தாலும் கூட உடலுறவின்போது இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய சட்டத்தில் முஸ்லிம்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களும் நட்பாக பழகக்கூடாது. அதேபோல் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்துக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபோன்ற விஷயங்களை தாலிபான்கள் கைவிட வேண்டும் என்று பல நாடுகளில் இருந்து கோரிக்கைகள் வலுக்க தொடங்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க தற்போது போடப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை எப்படி தாலிபான்கள் கண்டுபிடித்து எந்த வகையான நடவடிக்கை எடுக்க உள்ளனர்? என்பது தொடர்பாக எந்த அம்சங்களும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் ஆப்கானிஸ்தானில் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications