Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானுக்கு தாராளம்.. ரூ.917 கோடியை அள்ளிக்கொடுத்த உலக வங்கி.. இந்தியாவுக்கு வரும் ஆபத்து?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே தான் காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு உலக வங்கியிடம் கடன் கேட்டு பாகிஸ்தான் கையேந்தியது. தற்போது பாகிஸ்தான் அடிக்கடி உலக வங்கியிடம் கடன் கேட்டு கையேந்தி வரும் நிலையில் காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பெரிய அளவிலான நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு நேரடியாக ஆதரவு தெரிவிப்பதோடு, பயிற்சி, பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே தான் கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர்.

after-the-days-of-pahlagam-attack-world-bank-allocates-108-million-usd-dollar-to-pakistan-for-2-proj

இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. இந்த விஷயத்தில் முப்படைகளும் சேர்ந்து முடிவெடுக்க பிரதமர் மோடி சுதந்திரம் வழங்கி உள்ளார். விரைவில் தாக்குதல் நடத்தும் நேரம், தாக்குதல் நடத்தப்போகும் இடங்களை சம்பந்தப்பட்ட படையினரே முடிவு செய்து பாகிஸ்தானை பதம் பார்க்க உள்ளனர்.

இதனை உணர்ந்து பாகிஸ்தானும், நம் நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எல்லையில் ராணுவம் மற்றும் ரேடாரை குவித்துள்ளது. தற்போது பாகிஸ்தானின் நிதி நிலைமை என்பது மிகவும் மோசமாக உள்ளது. இப்படியான சூழலில் அந்த நாடு என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா தாக்கும்போது அதிகமாக பாதிக்கப்படும். படை வீரர்கள் இழப்பு, உள்கட்டமைப்புகள் சிதைவு, பொருளாதார செலவு உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் எதிர்கொண்டே ஆகும் நிலை உள்ளது. இப்போது பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானால் அதனை சமாளிப்பது என்பது சிரமமான காரியமாகும். இதனால் பாகிஸ்தான் அஞ்சி நடுங்கி வருகிறது.

இந்நிலையில் தான் உலக வங்கி பாகிஸ்தானுக்கு 108 மில்லியன் அமெரிக்கா டாலரை ஒதுக்கி உள்ளது. இந்த நிதி என்பது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் 2 திட்டங்களுக்கு செலவிடும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானுக்கு மொத்தம் 108 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.917 கோடியாகும். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிதி என்பது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் 2 திட்டங்களை நிறைவேற்ற வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஒருங்கிணைந்த சுற்றுலா மேம்பாடு (Integrated Tourism Development or KITE) மற்றும் கைபர் பக்துன்வா கிராம அணுகல் திட்டம் (Khyber Pakhtunkhwa Rural Accessibility Project or KPRAP) ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என்ற கண்டிஷனுடன் உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் கூட தற்போது பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஒருபுறம் உள்நாட்டில் பலுசிஸ்தான் மக்களுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் மோதல் உள்ளது. மறுபுறம் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது உள்ளது. இப்படியான சூழலில் பாகிஸ்தான் இந்த நிதியை ராணுவத்துக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படலாம்.

மேலும் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கவராதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. பயிற்சி வழங்கி வருகிறது. இதனால் தான் பஹல்காமில் தாக்குதல் என்பதே நடந்தது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. ஆனாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் உலக வங்கி பாகிஸ்தானுக்கு நிதி ஒதுக்கி இருப்பது என்பது பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+