கனவுல கூட இப்படி நடக்காது.. காணாமல் போன ரூ.4 கோடியை கண்டுபிடித்த Claude AI.. எப்படி?
சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றிய சுவாரஸ்யமான சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் தவித்த தனது பழைய பிட்காயின் வாலெட்டை, அமெரிக்க நிறுவனமான Anthropic உருவாக்கிய AI சாட்பாட் கிளாட் (Claude) உதவியுடன் ஒருவர் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளார். இந்த வாலெட்டில் இருந்த 5 பிட்காயின்கள் தற்போது சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பைத் தொட்டுள்ளன.

"cprkrn" என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் செயல்படும் இந்த நபர், 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்லூரி காலத்தில் கையில் இருந்த சிறு தொகையை கொண்டு பிட்காயின்களை வாங்கியுள்ளார். அப்போது ஒரு பிட்காயினின் விலை சுமார் 250 அமெரிக்க டாலராக இருந்தது.7 பிட்காயின் எனில் அப்போதை ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 75000 முதல் 80000 ரூபாய் வரையில் இருக்கும்.
கிரிப்டோ வாலெட்-ன் Key அதாவது பாஸ்வோர்டு-ஐ சேமித்து வைத்த பைல் எங்கு இருக்கிறது என்பதை மறந்துவிட்டார் அந்த நபர், இதனால் 2015 முதல் அந்த வாலெட்டை அணுக முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் முடியாத நிலையில், இறுதியில் AI உதவியை நாடியுள்ளார்.
எப்படியாவது கிரிப்டோ வெலெட்-ன் பாஸ்வோர்ட்-ஐ கண்டு பிடித்தாக வேண்டும் என்ற திட்டத்தில் தனது கம்ப்யூட்டருக்கான மொத்த ஆக்சிஸ்-யை கிளாட் AI-க்கு கொடுத்துள்ளார். ஆக்சிஸ் கொடுத்த பின்பு தனது பிரச்சனையா ப்ராம்ட் வாயிலாக விவரித்து கிரிப்டோ Key-ஐ கண்டுபிடித்து அளிக்க கூறியுள்ளார்.
கிளாட் AI-யின் உதவியுடன் சாத்தியமான அனைத்து கடவுச்சொல் காம்பினேஷன்களையும், ஒவ்வொன்றாக முயற்சித்ததில் இறுதியில் வெற்றி கிடைத்தது. மே 13 அன்று இந்த வாலெட் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. பிளாக்செயின் தரவுகளின்படி, 2015 முதல் இந்த வாலெட்டில் எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென செயல்பாட்டுக்கு வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கிரிப்டோகரன்சி உலகில் பலருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. பல ஆண்டுகளாக மறந்துபோன அல்லது அணுக முடியாத வாலெட்டுகளை மீட்டெடுப்பதில் AI எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பாக, மறந்த கடவுச்சொற்கள், முக்கிய தகவல்கள், பழைய கோப்புகள் ஆகியவற்றை மீட்டெடுப்பதில் AI இனி முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நபர் தனது கல்லூரி நாட்களில் மிகக் குறைந்த விலையில் வாங்கிய பிட்காயின்கள் இன்று பெரும் செல்வமாக மாறியுள்ளன. சுமார் 1,250 டாலரில் (அப்போதைய மதிப்பில்) வாங்கிய 5 பிட்காயின்கள் தற்போது சுமார் 4 கோடி ரூபாய் வரை மதிப்பு உயர்ந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications