அபுதாபி அய்மான் சங்கத்தில் பைத்துல்மால் துவக்க விழா

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபி இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் (அய்மான்) சார்பாகத் துவங்கப்பட்ட பைத்துல்மால் (அய்மான் ட்ரஸ்ட்) அறிமுகம் மற்றும் துவக்க விழா 18-06-14 அன்று அபுதாபி செட்டிநாடு உணவகத்தின் மாடியில் நடைபெற்றது.

அய்மான் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அய்மான் செயலாளர் காயல்பட்டினம் எஸ் ஏ சி ஹமீத், அய்மான் மார்க்கத் துறைச் செயலாளர் காயல்பட்டினம் ஹபீப் ரஹ்மான் ஆலிம், அபுதாபி அமீரகக் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான், ஒருங்கிணைப்பாளர் ஆவை அன்சாரி, அதிரை கவியன்பன் கலாம், லால்பேட்டை அப்துல் ரஹ்மான், திருச்சி அய்மான் கல்லூரி நிர்வாகி கீழக்கரை ஜாஃபர் மற்றும் அய்மான் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Aiman meeting held in Abu Dhabi

ஹபீப் ரஹ்மான் ஆலிம் அவர்களின் கிரா அத் மற்றும் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதிரை ஷாஹுல் ஹமீத் தனது தலைமையுரையை நிகழ்த்தினார்கள். கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய தெளிவுரையும் வழங்கினார்கள். மேலும், வினாக்களுக்கான விரிவான விடைகளை "ஸ்கைப்" வழியாக இந்தியாவில் இருந்து தமிழகம் முழுவதும் பைத்துல் மால்களை உருவாக்கி வரும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களிடமும் விளக்கமாகப் பெறப்பட்டன.

அய்மான் ட்ரஸ்ட், தமிழகத்தின் அனைத்து பைத்துல் மால்கள் மற்றும் பயனாளர்களுக்கான ஒப்பந்தம் பற்றிய விளக்கங்களும் தெளிவு பெறப்பட்டன. முதற்கட்டமாக முன்பு ஒப்புக் கொண்ட 15 பேர்களும் நிதியுதவியைத் துவக்கமாக அளித்து விரைவாக இத்திட்டம் செயல்பாட்டில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது, இறுதியாகத் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+