அபுதாபி அய்மான் சங்கத்தின் தமிழ் மொபைல் குர்ஆன் மென்பொருள் வெளியீடு!
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபி நகரில் இயங்கி வரும் தமிழக முஸ்லிம்களின் அமைப்பான அய்மான் சங்கம் முப்பெரும் நிகழ்ச்சிகளை 20.02.2014 அன்று மாலை இந்தியன் இஸ்லாமிக் சென்டர் ஆடிட்டோரியத்தில் கொண்டாடியது.
மீலாது நபி விழா, தமிழ் மொபைல் குர்ஆன் வெளியீடு விழா மற்றும் அய்மான் சங்கத்தின் 34-வது ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் அய்மான் சங்கத் தலைவர் அதிரை எ.ஷாஹுல் ஹமீத் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஹாபிழ் முஹம்மத் இத்ரீஸ் மரைக்காயர் இறைமறை வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார். திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் கனி மொழிக் கவிஞர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜி முன்னிலை வகித்தார். அய்மான் சங்கத்தின் செயலாளர் லால்பேட்டை மெளலவி ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அய்மான் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அறிமுகவுரை நிகழ்த்தினார்.
உணர்வாய் உன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தஞ்சை. ஜலால், ஹாபிழ். ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி, மெளலவி ஹலீலுர் ரஹ்மான் ஆலிம், துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர் முஹம்மது மஃரூப் ஹாஜியார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

திருச்சி மாநகரில் இயங்கி வரும் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் செயலாளரும், அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கீழக்கரை. சையத் ஜாஃபர் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார்.
அய்மான் தமிழ் மொபைல் குர்ஆன் மென்பொருளை சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஏ. ஷாஹுல் ஹமீத் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளரும், அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவருமான குத்தாலம் ஏ.லியாகத் அலி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

நெல்லை நேஷனல் பொறியியல் கல்லூரியின் ஆலோசகரும், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ரவுத்தர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் திருவை. எம். அப்துல் ரஹ்மான், அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவரும்,தி ருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் துணைத் தலைவருமான கீழக்கரை டவுன் காஜி மெளலவி ஏ.எம்.எம்.காதர் பக்ஷ் ஹுஸைன் ஸித்தீகி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் துபாய் ஈமான் நிர்வாகிகள், அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், அபுதாபி மெளலிது கமிட்டி நிர்வாகிகள், சமுதாய அமைப்புக்களின் பிரமுகர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து செயல்பட்டு வரும் ஜமாஅத் அமைப்பின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் திருவாடுதுறை அன்சாரி பாஷா, காயல் எம்.ஓ.முஹம்மது உமர் அன்சாரி, களமருதூர் ஷர்புத்தீன், லால்பேட்டை முஹம்மது அப்பாஸ், கொள்ளுமேடு ஹாரிஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியில் அய்மான் சங்கத்தின் பொருளாளர் கீழை. முஹம்மது ஜமாலுத்தீன் நன்றி கூறினார்.
காயல் மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ளரி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications