விமானம் வெடிக்கப் போவதாக கூறிய பயணி... அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் அரேபியா விமானம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: விமானம் வெடிக்கப் போவதாக பயணி ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஏர் அரேபியா விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர் அரேபியா நிறுவனத்தின் ஜீ-9128 விமானம் ஒன்று குவைத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென விமானம் வெடிக்கப் போவதாக கத்தியுள்ளார்.

இதனால், உடனடியாக அந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதியின் ராணுவ விமான தளமான அல் மிஹாத் ராணுவ தளத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அங்கு விமானம் உரிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அல் மிஹாத் விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் கூறும் போது "விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. தற்போது உயர் அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்கள்.

விமானம் வெடிக்கப் போவதாக கத்திய பயணியின் விபரமோ, அவர் கத்தியதற்கான காரணம் குறித்தோ தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+