‛‛எல்லாமே போச்சு’’.. பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த விமானி.. ஏர் கனடா கொடுத்த தண்டனையை பாருங்க!
இஸ்ரேல்: ஏர் கனடா விமானத்தில் பணியாற்றிய பைலட் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் சமூக வலைதளத்தில் பதிவுகள் செய்தார். மேலும் அவர் தனது உடையில் பாலஸ்தீனத்தின் கொடியை அணிந்து பணி செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் அவருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து தான் போர் தொடங்கியுள்ளதாக கூறி இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்த தொடங்கியது. இன்று 4வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது.
இந்த யுத்தத்துக்கு முக்கிய காரணம் என்பது காசா பகுதியாகும். பாலஸ்தீனத்துக்கு சொந்தமான இந்த பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனை இஸ்ரேல் கைப்பற்ற துடிக்கும் நிலையில் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது மோதல் அதிகரித்து போராக உருமாறி உள்ளது.
தற்போது வரை 2000 பேர் வரை பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் மோதல் நீடித்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. அதேபோல் ஹமாஸ் இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இன்னும் இருதரப்புக்கும் இடையே சுமூகமான உறவு வரவில்லை.
இதனால் பலி எண்ணிக்கை என்பது இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை பொறுத்தமட்டில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல மேலை நாடுகள் இஸ்ரேல் பக்கம் உள்ளனர். அதேவேளையில் ஜோர்டான், ஈரான், கத்தார், துருக்கி, லெபனான் உள்பட பல இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர்.
இதேபோல் இஸ்ரேல்-பாலஸ்தீனம் யுத்தத்தில் ஒவ்வொருவரும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். அந்த வகையில் ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் முஸ்தபா எஸ்ஸோ தனது சீருடையில் பாலஸ்தீனத்தின் கொடியை வைத்து ஆதரவு தெரிவித்தார்.
மேலும் அவர் சமூக வலைதளங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் பதிவுகளை செய்து வைத்தார். இந்நிலையில் தான் முஸ்தபா எஸ்ஸோ மீது விமான நிறுவனத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications