அபுதாபியில் சம்பளம் கிடைக்காமல் தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஏர் இந்தியா மேலாளர்
அபுதாபியில் சம்பளம் கிடைக்காமல் தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு ஏர் இந்தியா மேலாளர் உதவி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபி: அபுதாபியில் சம்பளம் கிடைக்காமல் தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு ஏர் இந்தியா மேலாளர் நவீன் குமார் உணவு வழங்கியதோடு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த 14 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களுக்கு அந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வந்தனர்.

அவர்களுக்கு அபுதாபி தமிழ்ச் சங்க தலைவர் ரெஜினால்டு தொழிலாளர் நலத்துறையை அணுகுவதற்கு உதவி செய்தார். அதன் காரணமாக அவர்கள் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரியிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.
அதன் பின்னர் ஏர் இந்தியா மேலாளர் நவீன் குமார் அவர்களுக்கு மதிய உணவு வழங்கி ஆதரித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த தொழிலாளர்கள் தங்களுக்கு உதவி செய்து வரும் ஏர் இந்தியா மேலாளர் மற்றும் தமிழ்ச் சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications