ஜெர்மனிக்கு மோடி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு!: மாற்று விமானத்தில் கனடா சென்றார்
பெர்லின்: பிரதமர் நரேந்திரமோடி, ஜெர்மனிக்கு பயணித்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏர் இந்தியாவின் போயிங் 747-400 வகை விமானத்தில் பிரதமர் பிரான்சுக்கு பயணப்பட்டிருந்தார். பிறகு ஜெர்மனி சென்றிருந்த நிலையில், அந்த நாட்டில் இருந்து நேற்றிரவு கனடா நாட்டு தலைநகர் ஒட்டாவா புறப்பட இருந்தார்.

கோளாறு
ஆனால், அப்போதுதான், விமானத்தி்ல் கோளாறு ஏற்பட்டிருந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மும்பையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு விமானம் ஜெர்மனி அனுப்பப்பட்டது.

மாற்று விமானத்தில் பயணம்
அந்த விமானத்தின் மூலம், மோடி ஒட்டாவா சென்றடைந்தார். பொதுவாக பிரதமர் வெளிநாடுகள் செல்லும்போது, இப்படி ஒரு மாற்று விமானம் மும்பையில் நிறுத்தப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பழுது முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் அதிருஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

கனடாவில் வரவேற்பு
கனடாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர், மோடி..மோடி..என்று உற்சாக குரல் எழுப்பினர்.

காலை வாரியது
ஜெர்மனியில், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு கேட்டார் மோடி. ஆனால் இந்திய விமானம் இப்படி, பாதியிலேயே காலை வாரிவிட்டு, இந்தியாவின் தயாரிப்பை கேள்விக்குறியாக்கிவிட்டதுதான் இதில் வேதனை. இந்தியாவின், கடந்த கால தயாரிப்புகள் இவ்வளவு மட்டமாக இருப்பதை தெரிந்து கொண்டு, வருங்காலத்திலாவது மேக் இன் இந்தியா மூலமாக, சிறந்த பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே இந்திய மக்கள் ஆசை.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications