கன மழை, கடும் குளிர் காற்றால் என்ஜின் உறைந்து விபத்துக்குள்ளானதா ஏர் ஏசியா விமானம்?
ஜகர்தா: ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அந்த விமானத்தின் என்ஜின் கடும் குளிர் காற்று காரணமாக உறைந்து போய் செயலிழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று இந்தோனேசிய வானிலை ஆய்வு மையத் தகவல்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 சிங்கப்பூருக்கு கிளம்பியது. ராடாரில் இருந்து மாயமான விமானம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது.

விமானம் விழுந்த கடல் பகுதியில் இருந்து இதுவரை 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விமான பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விமானம் எப்படி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்பது குறித்து புதிய சந்தேகம் ஒன்றை இந்தோனேசிய வானிலை ஆய்வு மைய இணையதளம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தன்று விமானம் பறந்த பகுதியில் புயல் வீசியுள்ளது. கன மழையும் பெய்துள்ளது. கடும் குளிர்காற்றும் வீசியுள்ளது. இதன் காரணமாக மேகங்களுக்கு இடையே விமானம் பறந்தபோது என்ஜினில் ஐஸ் உருவாகி செயல்பாடு இழந்திருக்கலாம் என்று அந்த இணையதளம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மேலும் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில், தட்பவெட்ப நிலை மைனஸ் 80 முதல் 85 டிகிரி செல்சிஸாக இருந்துள்ளது. இதனாலும் என்ஜின் உறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications