ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழும் முன்பு முக்கிய கம்ப்யூட்டர் சிஸ்டத்தை செயலிழக்க செய்த விமானிகள்
ஜகர்தா: ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு அதில் இருந்த முக்கிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை விமானிகள் செயல் இழக்கச் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்தனர். அதில் 70 பேரின் உடல்கள் தான் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்பு பெட்டிகள் உள்ளிட்ட சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விமான பாகங்களை தேடும் பணியை இந்தோனேசிய ராணுவம் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தும் குழுவின் தலைவர் மார்ட்ஜோனோ சிஸ்வோஸுவர்னோ கூறுகையில்,
விமானத்தின் கருப்பு பெட்டி அதாவது டேட்டா ரெக்கார்டரில் பதிவானவற்றில் இருந்து விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. ஆனால் அது குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது.
விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு பாதுகாப்பான உயரத்தில் பறந்துள்ளது. ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளானபோது அதை துணை விமானி தான் இயக்கினார். கேப்டன் அதை மேற்பார்வையிட்டார். விமானத்தை எடுக்கையில் அது நல்ல நிலையில் இருந்துள்ளது. சிப்பந்திகள் அனைவரும் அனுபவசாலிகள் என்றார்.
விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு அதில் இருந்த முக்கிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை விமானிகள் செயல் இழக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் விமானி அறையில் இருந்த சர்க்யூட் பிரேக்கரை அறுத்துவிட்டுள்ளனர். விமானம் 30 நொடிக்குள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடி உயரத்தில் ஏறியுள்ளது.
விமான விபத்து பற்றிய இறுதி விசாரணை அறிக்கையை சமர்பிக்க 6 முதல் 7 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications