ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் இந்தோனேசியாவுக்கு உதவும் ஆஸ்திரேலியா
ஜகர்தா: இந்தோனேசிய கடல் பகுதியில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய ராணுவ விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஞாயிற்றுக்கிழமை மாயமானது. இந்நிலையில் விமானம் இந்தோனேசிய கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் விமானத்தை தேடும் பணி இன்று துவங்கியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய விமானப் படைக்கு சொந்தமான (ஆர்ஏஏஎப்) ஏபி-3சி ஓரியான் விமானம் இந்தோனேசியாவுக்கு கிளம்பி வந்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய விமானப் படை தளபதி மார்க் பின்ஸ்கின் கூறுகையில்,
ஓரியான் விமானம் தேடல் மற்றும் மீட்பு பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் ராடார், இன்ப்ராரெட் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார்கள் உள்ளதால் தேடல் பணிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். விமானத்தை தேடுவது தான் தற்போதைய குறிக்கோள். சில பயணிகள் மற்றும் சிப்பந்திகளையாவது உயிருடன் மீட்போம் என்று நம்புகிறோம் என்றார்.
ஏர் ஏசியா விமானத்தை தேட சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் உதவ முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications