கியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன!
கியூபாவில் நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 104 பேரும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
ஹவானா: கியூபாவில் ஹவானா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானம், விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 104 பயணிகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
கியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு இன்று விமானம் புறப்பட்டது. அதில், 104 பயணிகள் இருந்தனர்.

ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது.
உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விமானத்தில் பயணித்த 104 பயணிகள் நிலை குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அரசு விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானா, பல பழைய விமானங்களை சமீபத்தில் தான் பயன்படுத்துவதை நிறுத்தியது. விபத்துக்குள்ளான இந்த விமானம் சமீபத்தில்தான் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications