9/11 தாக்குதல்: 135 மில்லியன் டாலர் நஷ்டஈடு கொடுக்க அமெரிக்க விமான நிறுவனம் சம்மதம்
Subscribe to Oneindia Tamil

கடந்த 2001ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்கொய்தா இயக்கத் தீவிரவாதிகள் உலக வர்த்தக மைய கட்டிடங்கள் மீது விமானங்களை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இரட்டை கோபுரத்தில் இயங்கி வந்த கேண்டர் பிட்ஸ்ஜெரால்ட் என்ற நிறுவனம், இந்த தாக்குதலில் தனது 650 ஊழியர்களை இழந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நன்கு சோதிக்காமல் விமானத்தில் ஏற்றியதாக தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பயன் படுத்திய அமெரிக்கன் விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது.
வழக்கின் விசாரணையில் 135 மில்லியன் டாலர் தொகையை நஷ்ட ஈடாக வழங்க விமான நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications