மயாமி ஏர்போர்ட் மீது தவழ்ந்த நீல புகை, யு.எப்.ஓ.வா?: வைரலான வீடியோ
மயாமி: அமெரிக்காவின் மயாமி நகரில் உள்ள விமான நிலைய எல்லையில் வானில் நீல நிறத்தில் ஏதோ புகை போன்று பறந்தது பற்றிய வீடியோவால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மயாமி நகரில் இருக்கும் விமான நிலையம் ஒன்றில் இரவு நேரத்தில் வானில் நீல நிறத்தில் புகை போன்ற ஒன்று தெரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த புகை போன்ற உருவத்தை விமான நிலையத்தில் இருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.

பயம்
நீல நிற புகை வடிவம் விமானங்கள் மீது மோதிவிடும் என்று விமான நிலையத்தில் இருந்தவர்கள் அஞ்சியுள்ளனர். வானில் பயணித்த அது என்னவென்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழம்பித் தவித்தனர்.
வீடியோ
இது என்ன வீடியோ என்று ஆய்வு செய்தால் அது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டு யூடியூபில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோ கடந்த வியாழக்கிழமை மீண்டும் வைரலாகியுள்ளது.

அது என்ன?
இன்று நீங்கள் வானில் புகை போன்று எதையாவது பார்த்திருந்தால் பயப்பட வேண்டாம். புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் நகரில் இருந்து ஏவப்பட்ட அட்லஸ் 5 ராக்கெட்டால் ஏற்பட்ட புகை என மயாமி அதிகாரிகள் அப்போதே தெரிவித்திருந்தனர்.

அட போங்கப்பா
ஏற்கனவே வைரலாகி புஸ்ஸாகிப் போன வீடியோவையா மறுபடியும் வைரலாக்கி பீதியை கிளப்புகிறீர்கள் என நெட்டிசன்கள் அலுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் சொல்வதும் நியாயம் தானே.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications