அஜித் ஓட்டிய கார் டயர் வெடித்தது.. ரேஸின்போது திடீரென புகை வந்ததால் பரபரப்பு!
ஆம்ஸ்டர்டாம்: ஐரோப்பாவில் நடைபெற்று வரும் GT4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிய கார் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஸில் அஜித் ஓட்டிய காரின் டயர் திடீரென வெடித்து புகை வந்தது. உடனே காரை நிறுத்தியதால் காயமின்றி தப்பியுள்ளார் அஜித். அஜித் ஓட்டிய கார் டயர் வெடித்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் குமார் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய தொடரில் பங்கேற்று உள்ளார். அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளங்களில் வெளியிட்ட தகவலின்படி, அஜித் தொடர்ந்து 60 நிமிடங்கள் தனியாக கார் ஓட்டும் சவாலை ஏற்றுள்ளார் அஜித். இந்த வகை பந்தயத்தில் இணை ஓட்டுநர் இருக்க மாட்டார்.
நவம்பர் மாதத்தில் தான் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால், தற்போது அஜித் தனது முழு கவனத்தையும் மோட்டார் ஸ்போர்ட்ஸில் செலுத்தி வருகிறார். தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மற்றும் குறைந்தது 5 - 6 மணி நேரம் பந்தய பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச பந்தய சர்க்யூட்டுகளில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ள அஜித், இந்த முறையும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
மே 17-ம் தேதியான நேற்று இந்த ரேஸ் தொடங்கியது. இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று இந்திய நேரப்படி மதியம் 3:40 மணிக்கு தொடங்கியது. இதில் நடிகர் அஜித்குமார் போர்ஷியா அணி சார்பில் பங்கேற்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ரேஸின் போது, அஜித்குமார் ஓட்டிய கார் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரேஸில் அஜித் ஓட்டிய காரின் டயர் வெடித்து புகை வந்தது. உடனே காரை நிறுத்தியதால் காயமின்றி தப்பியுள்ளார் அஜித். விபத்தை தொடர்ந்து, கார் ரேஸ் டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அகற்றப்பட்டுள்ளது. டார்க் சர்க்யூட்டில் கார் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் நடிகர் அஜித் பந்தயத்தில் பங்கேற்றார்.
-
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications