வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்? பின்?: அமீரகத்தில் இன்று நடக்கும் பட்டிமன்றம்
Subscribe to Oneindia Tamil
அல் அய்ன்: அல் அய்ன் தமிழ் குடும்பம் அமைப்பு நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம் இன்று இரவு நடைபெற உள்ளது.
அமீரகத்தின் பசுமை நகராக இருந்து வருகிறது அல் அய்ன். இந்நிலையில் அல் அய்ன் தமிழ் குடும்பம் அமைப்பு சார்பில் இன்று நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது.
வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்? பின்? என்ற தலைப்பில் பட்டிமன்றம் இன்று இரவு 8 மணிக்கு இந்திய சமூக மைய உள்ளரங்கில் நடக்க உள்ளது.
இந்த பட்டிமன்றத்திற்கு நடுவராக திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் பீ.மு.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.
இந்த விழாவில் தமிழர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொள்ளுமாறு சங்க நிர்வாகி முபாரக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications