”அல்கொய்தா” தொடர்புடைய முக்கிய தீவிரவாதி எகிப்தில் கைது
கெய்ரோ: அல்-கொய்தா தலைவருக்கு நெருக்கமான தீவிரவாதியான சிகதா என்பவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத இயக்கமான அல் கொய்தாவின் தலைவர் அய்மான்-அல்-ஜவாரிக்கு நெருக்கமானவர்.
"திர்வாட் சாலா சிகதா" என்ற அந்த தீவிரவாதி கெய்ரோவின் புறநகர் பகுதியில் உலாவும் போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்:
முன்பாக, அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கு சம்பந்தமாக 1990 இல் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒசாமா பின்லேடன் இறப்பு:
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2011 இல் அமெரிக்க சிறப்பு ராணுவப் படையினரால் கொல்லப்பட்டார்.
இஸ்லாம் ஜிகாத்:
இந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள சிகதா பின்லேடனுடன் சேர்வதற்கு முன் எகிப்தில் இஸ்லாமிய ஜிகாத்தை நடத்தி வந்துள்ளார். அப்போது, அவர் ஜவகாரியின் கூட்டாளியாக இருந்ததாக நம்பப்படுகிறது.
ஏற்கனவே ஈரானில் கைது:
மேலும், 2001 ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட ''செப்டம்பர் லெவன்'' தாக்குதலுக்கு பிறகான அமெரிக்கா தலைமையிலான ஆப்கன் மீதான படையெடுப்பில் இவர் ஈரானில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தலைமறைவு வாழ்க்கை:
தற்போது, கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி சிகதா தனது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு முன் துருக்கி மற்றும் லிபியா நாடுகளில் தலைமறைவாக பதுங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது.
500 பேர் பலி:
இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 500 எகிப்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அல்கொய்தாவை சேர்ந்த தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது திடுக்கிட வைக்கும் தகவலாகும்.












Click it and Unblock the Notifications