தேர்தல் கணக்கு காட்டாமல் கள்ளக் காதலியுடன் கூத்தடித்த அமெரிக்க கவர்னருக்கு ஜெயில்!
மாண்ட்கோமரி(யுஎஸ்): தேர்தல் செலவுக் கணக்கு முறையாகக் காட்டாத அலபாமா மாநில கவர்னர் ராபர்ட் பென்ட்லி க்கு ஜெயிலில் அடைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொருளாதார ரீதியான தொடர்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாத குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நீதி விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந் நிலையில் அவரை மாண்ட்கோமரி கவுண்டி ஜெயிலில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெயில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டவுடன் தானாக முன்வந்து பதவி விலகியுள்ளார்.
கவர்னர் பங்களாவில் கள்ளக் காதலியுடன் கூத்தடித்தும் உள்ளார்..முன்னாள் அரசியல் ஆலோசகர் ரெபேக்கா கால்டுவெல் மேசனுடன் பென்ட்லிக்கு உள்ள தொடர்பு கவர்னர் பங்களாவில் வெளிப்படையான ரகசியமாம்.
அவருடைய காதல் விவகாரம் வெளியே வரவிடாமல் தடுப்பதற்காக, அரசு அதிகாரிகள் மூலம் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அரசுப் பணியாளர்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பதவி விலகிய பென்ட்லி, தான் சில வேளைகளில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை, தவறுகள் செய்துள்ளேன்.,
சில நேரங்களில் நான் சரியாக செயலாற்றவில்லை என்றாலும், எப்போதும் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்துள்ளேன்.
கவர்னர் பதவியை விட்டு இறங்குகிறேன். மற்ற முக்கியமான சேவைகள் செய்ய தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
74 வயது நிரம்பிய பென்ட்லி, அமெரிக்கன் ஏர் ஃபோர்ஸில் மெடிக்கல் ஆபீசராக பதவி வகித்து கேப்டனாக ஒய்வு பெற்றவர்.
பின்னர் எம்.டி பட்டப்படிப்பு படித்து தெற்கு அமெரிக்கா முழுவதும் தோல் சம்மந்தப்பட்ட சிறப்பு மருத்துவமனைகள் நடத்தி வந்தார்.
ஏழு வருடங்கள் கவர்னராக இருந்தாலும், சட்டத்திற்கு முன் அவரால ஒன்றும் செய்யமுடியவில்லை. கிடுக்கிப் பிடியில் சிக்கி பதவி விலகியுள்ளார்.
தேர்தல் கணக்கு காட்டவில்லை, சொத்துக்கள் கணக்கு காட்டவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யும் விசாரணையும், அதைத் தொடர்ந்த ஜெயில் தண்டனையும் இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று தானே!.
கவர்னர் பதவி விலகியதால் இடைத் தேர்தல் எல்லாம் கிடையாது. துணை கவர்னர் கே ஐவி மீதிக் காலத்திற்கு கவர்னராக பதவி வகிப்பார்.
-இர தினகர்
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications