ஏலியன்கள் பஞ்சத்தில் அடிபட்டது மாதிரி இருக்க மாட்டார்கள்.. கரடி மாதிரி "பல்க்கி"யாக இருப்பார்களாம்!
மாட்ரிட்: வேற்றுகிரகவாசிகள் 300 கிலோ எடையுடன் கரடி தோற்றத்தில் இருப்பார்கள் என பார்சிலோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
வேற்று கிரகவாசிகளின் உருவம் மற்றும் எடை அளவு குறித்து பார்சிலோனா பல்கலைக்கழகத்தின் பிரபஞ்ச தோற்றம் குறித்த நிபுணர் பெர்குஸ் சிம்சன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இவர், வேற்று கிரகவாசிகள் 5 கோடி பேர் வாழ்வதாகவும், அவர்கள் கரடி போன்ற தோற்றத்தில் இருக்கலாம் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதோடு, வேற்றுகிரகவாசிகள் சுமார் 314 கிலோ வரை எடை இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெயஸ் கோட்பாடு
இந்தத் தகவல்களை அவர் 'பெயஸ்' கோட்பாடு (புள்ளி விவர கணக்கியல்) அடிப்படையில் கணித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பறக்கும் தட்டு பறக்கும்
வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்ற சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகிறது. பறக்கும் தட்டுகளில் அவர்கள் பூமிக்கு வந்து செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிறது.

பாய்ட் சொல்வது என்ன
ஏற்கனவே, அமெரிக்காவின் உலக அளவிலான விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான லாக்ஹீட் மார்டினில் ஆராய்ச்சி பொறியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்ற பாய்ட்புஷ்மேன் (78) என்பவர் வேற்று கிரகவாசிகளுடன் உரையாடியதாகவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டதாகவும் பாய்ட்டின் நண்பர் பாட்டர்சன் தெரிவித்துள்ளார்.

யூடியூபில்
மேலும், தனது நண்பர் பாய்ட் புஷ்மேனின் பேச்சுக்களை தொகுத்து அவர் பேட்டியாக யூடியூப்பில் வெளியிட்டு உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் பாய்ட் மரணமடைந்தார்.

230 வயசு
பாய்ட்டின் கருத்துப் படி, ‘சில வேற்றுகிரகவாசிகளுக்கு 230 வயது இருக்கும். 4 முதல் 5 அடி வரை உயரம் இருக்கும். நீளமான விரல்கள் இருக்கும். அவர்களுடைய கிரகம் கியூண்டும்னியா (Quintumnia) பூமியில் இருந்து அந்த கிரகத்திற்கு செல்ல 45 வருடங்களாகும்.

இதில் கோஷ்டிகள் வேற
அவர்களுக்கு என்று அங்கு ஒரு வேலையை கொடுத்து பூமிக்கு அனுப்புவதாகவும் அதனால் அவர்கள் பூமிக்கு வருகிறார்கள். வேற்று கிரகவாசிகளில் 2 பிரிவுகள் உள்ளது' எனக் கூறப்படுகிறது.

பல்க் ஆக இருப்பார்கள்
வேற்றுக்கிரக வாசிகள் என்றாலே முட்டைக் கண்களுடன் பஞ்சத்தில் அடிபட்டது போல் இருப்பார்கள் என்ற தோற்றத்தை நமது சினிமாக்கள் ஏற்படுத்தி வைத்துள்ளன. ஆனால், அவற்றில் இருந்து இந்த நிபுணர்களின் கருத்து மாறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications