பொறுங்க சார் முதல்ல அவர் போகட்டும்.. ஒய்யாரமாக ரோட்டில் நடந்து சென்ற முதலை!

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடாவில் சாலையில் முதலை நடந்து சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

முதலைய சூல பார்த்திருப்பீங்க... முதலைப்பண்ணையில பார்த்திருப்பீங்க.. ஏன் தண்ணியிலக் கூட பாத்திருப்பீங்க.. ஆனா ரோட்டுல பாத்திருக்கீங்களா.. அதுவும் ஒய்யாரமா ரோட்டக்கிராஸ் பண்ணி பாத்திருக்கீங்க.. அப்படி பாத்ததில்லைன்னா இந்த வீடியோவை பாருங்க..

கனடா நாட்டின் வில்லேரே பகுதியில் உள்ள கிழக்கு ஜர்ரி தெரு.. மதியம் ஒரு மணி இருக்கும்.. சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனகங்கள் எல்லாம் டக்கென பிரேக் பிடித்து மெதுவாக நகர்கின்றன.. திடீரென ஒரு பெரிய சைஸ் முதலை கண்ணில் தென்படுகிறது.. அந்த முதலை இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் கிராஸ் செய்து ஒரு காருக்கு அடியில் புகுந்து கொள்கிறது.

Alligator spotted in mid road

மேசம் சமஹா என்பவர் இந்த வீடியோவை எடுத்து தனது டிவிட்டர் பக்கதில் பதிவு செய்துள்ளார். இதுவரை 2.7 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள். மேலும் பலர் இதனை ரீடிவீட் செய்து வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.

முதலைகளை வைத்து வித்தைக்காட்டும் ஒரு தனியார் கம்பெனிக்கு சொந்தமானது அந்த முதலை. கம்பெனி ஊழியர்கள் மதிய உணவுக்கு சென்றிருந்த நேரத்தில் வேனில் இருந்து தப்பி வந்திருக்கிறது அது. நல்லவேளை அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் கம்பெனி ஊழியர்கள் அந்த முதலையை பிடித்து கூண்டுக்குள் அடைத்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+