பரிசு விழுந்தது தெரியாமல் குப்பையில் வீசப்பட்ட லாட்டரி.. ஜஸ்ட் மிஸ்சில் தப்பிய பரிசுத்தொகை! யோகம்தான்
வாஷிங்டன்: லாட்டரி டிக்கெட்டிற்கு பரிசு அடித்தது தெரியாமல், அதை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்ட பெண் ஒருவர் திடீரென நியாபகம் வந்ததால், அந்த லாட்டரியை குப்பையில் இருந்து எடுத்து ஸ்கேன் செய்து பார்த்து இருக்கிறார். அந்த லாட்டரிக்கு பல லட்சம் ரூபாய் பரிசாக விழுந்துள்ளது. கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் பல லட்சம் மதிப்புள்ள லாட்டரி குப்பையோடு குப்பையாக போயிருக்கும் சூழலில் யோகத்திலும் ஒரு யோகம் அந்த பெண்ணுக்கு அடித்துள்ளது.
யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. வருட கணக்கில் லாட்டரிகளை வாங்கிய பலருக்கும் ஒரு ரூபாய் கூட அடிக்காமல் பணத்தை இழந்து கஷ்டபடுபவதைதான் அதிகம் பார்க்கிறோம். ஆனால் ஒரு சிலருக்கு வாங்கிய முதல் லாட்டரியிலேயே பல கோடி ரூபாய் பரிசு விழுந்து பலரையும் பொறாமைப்பட வைக்கிறது.

பல கோடிகளுக்கு அதிபதி
திண்ணையில் கிடந்தவருக்கு திடுக்கென அடித்ததாம் யோகம் என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு. அதாவது, அடுத்த வேலை என்ன செய்வது என்று தெரியாமல் கையில் பணமும் இன்றி தடுமாறிக்கொண்டு இருந்தவனுக்கு திடீரென வாழ்வு வந்தது போல இப்படி வாழ்க்கையில் எதிர்பாரா திருப்பத்தை பலருக்கும் லாட்டரி கொடுத்து விடுகிறது. சொல்லப்போனால் லாட்டரி வாங்க கூட காசு இன்றி கடன் வாங்கி டிக்கெட் வாங்கியவர்கள் அடுத்த நொடியே பல கோடிக்கு அதிபதியான நிகழ்வுகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.
நாய் கொண்டு வந்த சீட்டுக்கு பரிசு
இந்தியாவில் கேரளாவில் விற்கப்படும் லாட்டரிகளில் இப்படி சுவாரசியமான நிகழ்வுகளை அடிக்கடி காண முடியும். இந்தியாவில் மட்டும் இன்றி உலகம் முழுக்க லாட்டரிகளில் பணம் கிடைத்த பலரும் தங்களது அனுபவங்களை பகிரும் போது உண்மையாகவே அதிர்ஷ்டம் இருக்கிறது போலயே என நினைக்க வைக்கும். சமீபத்தில் கூட அமெரிக்காவில் நாய் கவ்வி வந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியவருக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்த செய்திகள் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
குப்பைத் தொட்டியில் எறிந்த டிக்கெட்
சரி.. இங்கே விஷயத்திற்கு வருவோம்.. அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் பெண் ஒருவருக்கு குப்பைத்தொட்டியில் கிடந்த லாட்டரியில் பல லட்சம் பரிசாக அடித்துள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு:- கெண்டக்கி மாகாணத்தில் உள்ள ஷெபெர்ஸ்விலே பகுதியை சேர்ந்தவர் பமேலே ஹவார்டு தோர்டன்.
5 டாலர் விலை கொண்ட இந்திய மதிப்பில் சுமார் 400 ரூபாய் மதிப்புள்ள ஸ்கார்ட்ச் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். மொத்தமாக 4 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். இதில் மூன்று லாட்டரி டிக்கெட்டை ஸ்க்ராட்ச் செய்து பார்த்ததில் அவருக்கு பரிசு எதுவும் விழவில்லை. இதனால் விரக்தியில் மொத்த டிக்கெட்டுகளையும் குப்பை தொட்டியில் தூக்கி எறிந்தார்.
லக்கி பாஸ்கர் போல கத்தியுள்ளார்
திடீரென நள்ளிரவுதான் அவருக்கு ஒரு நினைவு வந்துள்ளது. நான்காவது ஒரு டிக்கெட் வாங்கினோமே அதை எங்கே என்று யோசித்து இருக்கிறார். உடனடியாக மொத்த டிக்கெட்டுகளையும் குப்பையில் வீசியது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. உடனே தேடிப்போய் எடுத்து அந்த டிக்கெட்டை ஸ்க்ராட்ச் செய்து பார்த்து இருக்கிறார். அடுத்த நொடியே அவரால் நம்ப முடியாதது நடந்துள்ளது.
அதாவது, 80 ஆயிரம் டாலர் பரிசு அடித்த எண் கொண்டதாக அந்த டிக்கெட் இருந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 68 லட்ச ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதை அறிந்ததும், மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் வடித்துள்ளார்.
லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் எப்படி லாட்டரியில் பரிசு அடித்துவிட்டது எனக் கூறி குடும்பத்தினரே பயப்படும் அளவுக்கு கத்துவாரோ அப்படி, இவரும் சத்தம் போட்டு இருக்கிறார். உடனடியாக தனது தாய்க்கு போன் செய்த அந்த பெண், மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications