சும்மாவா சொன்னாங்க குரங்குகள் நம்ம மூதாதையர்னு... இந்த வீடியோவைப் பாருங்க புரியும்!
பாங்காக்: தாய்லாந்தில் வனவிலங்குப் பூங்கா ஒன்றில் உராங்குட்டான் குரங்கு தனக்கான ஊஞ்சல் படுக்கையை புத்திசாலித்தனமாக தானே தயாரித்துக் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் நகோரட்சசிமா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் உள்ளது நெமோ என்ற 14 வயது உராங்குட்டான் குரங்கு. சம்பவத்தன்று இந்த குரங்கு தனக்கான ஊஞ்சல் படுக்கையை தானே தயாரித்துக் கொண்ட சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சுமார் 4 நிமிடங்கள் ஓடுகின்றது.

பெட்ஷீட்...
முதலில் நீளமான பெட்ஷீட் போன்ற ஒன்றை அது எடுத்து வருகிறது. அதனை மனிதர்களைப் போலவே கூட்டின் ஒரு பக்கக் கம்பியில் கட்டுகிறது.

செக்கிங்...
பின்னர் மறுபக்கத்தையும் கட்டி, முடிச்சு சரியாக விழுந்திருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்கிறது. அதனைத் தொடர்ந்து அந்த ஊஞ்சலில் ஏறி அமர்கிறது.

சரியில்லையே...
ஆனால், அந்த ஊஞ்சல் அதற்கு போதுமானதாக இல்லை. இதனால் மீண்டும் கீழே இறங்கி, ஒரு பக்க துணியைக் கழட்டுகிறது.

குரங்குச் சேட்டைகள்...
பின்னர் அதனை சற்று கீழே இறக்கமாக கட்டுகிறது. இப்போது அதன் ஊஞ்சல் பெரிதாக அமைந்து விடுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த ஊஞ்சல் படுக்கையில் ஏறி, தன் குரங்குச் சேட்டைகளை அது காட்டுகிறது.
வைரல் வீடியோ...
ஆறறிவு படைத்த மனிதர்களைப் போலவே ஜாக்கிரதையாக, முடிச்சை நன்றாக இறுக்கி பரிசோதித்துக் கொள்வது போன்ற குரங்கின் இந்த செயல்கள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கின்றன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications