அமேசான் நிறுவனத்தில் இருந்து 1700 ஊழியர்கள் பணிநீக்கம்! ஏன் என்னாச்சு?
ஒட்டாவா: கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் இருந்து 1700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள 7 அலுவலகங்களையும் அமேசான் மூடியுள்ளது.
இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு உலகெங்கும் கிளைகள் பல்கி பெருகியுள்ளன. அந்த வகையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசானுக்கு சொந்தமாக நிறைய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி 7 அலுவலகங்களை அமேசான் மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றி வந்த 1700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்த போது பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தும் ஊதிய குறைப்பு செய்தும் உத்தரவிட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பலர் வேலை இழந்து பிசினஸ் தொடங்கினர். மேலும் சிலர் அதற்கான பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். கடந்த ஜனவரி மாதம்தான் அமேசானில் பணிபுரிந்த 500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அமேசான், மெட்டா முதல் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மோர்கன் வரை, மோசமான மேக்ரோ பொருளாதார நிலையை காரணமாக கூறி ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன .












Click it and Unblock the Notifications