அமேசானில் பல ஆயிரம் வருடங்களாக புதைந்து கிடந்த நகரம்! கற்பனைக்கு அப்பாற்பட்ட ஊர்! மிரண்ட ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

கிட்டோ: அமேசான் மழை காடுகள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மறைந்து இருந்த ஒரு நகரத்தையே ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இது ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் மிக பெரிய காடுகள் என்றால் அது அமேசானில் உள்ள மழை காடுகள் தான்.. சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த காடு பல ஆயிரம் வகையான உயிரினங்களைக் கொண்டுள்ளது.

 Amazon Rain forest a 3000 Year Hidden Old City In Discovered

இந்தக் காட்டின் பெரும்பகுதி பிரேசிலில் உள்ள போதிலும், மற்ற பகுதிகளில் அருகே உள்ள எட்டு நாடுகளில் பரவி இருக்கிறது. இதற்கிடையே அமேசான் மழை காடுகளின் செழிப்பான தாவரங்கள் இடையே மறைந்துள்ள ஒரு பெரிய நகரம் இப்போது ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமேசான் காடுகள்: உபனோ பள்ளத்தாக்கில் உள்ள இந்த பண்டைய நகரத்தில் உள்ள வீடுகள் சாலைகள் மற்றும் கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டு பக்காவாக இருந்துள்ளதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த பண்டை நகரம் எரிமலைக்கு மிக அருகே அமைந்துள்ளது.

 Amazon Rain forest a 3000 Year Hidden Old City In Discovered

எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் அபாயம் இருந்தாலும் கூட பொதுவாக எரிமலை அருகே இருக்கும் பகுதிகள் வளமானதாக இருக்கும். அதுபோல இந்த பகுதியும் வளமான மண்ணை கொண்டுள்ளது. தொலைதூர இடங்களில் அமைந்துள்ள பொருட்களை அளவிட ஒளியைப் பயன்படுத்தும் பிரபல ரிமோட் சென்சிங் முறையான LiDAR என்ற முறையைப் பயன்படுத்தி இதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையை லேசர் ஸ்கேனிங் என்றும் 3D ஸ்கேனிங் என்றும் அழைப்பார்கள்.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன: இது குறித்து தேசிய மையத்தின் விசாரணை இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் ரோஸ்டைன் கூறுகையில், "அமேசானில் இதுவரை நாம் கண்டறிந்த தளங்களை விட இது பழமையானது. எங்களுக்குத் தெரிந்த மற்ற தளங்களை விட இது பழமையானது. யூரோ சென்ட்ரிக் நாகரீகத்தைக் கொண்ட நகரம் போல இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு கலாச்சாரம் மற்றும் நாகரீகம் குறித்த நமது பார்வையை மாற்றுவதாக இருக்கிறது.

அமேசான் கலாச்சாரம் என்று நாம் இதுவரை ஒரு வகை கலாச்சாரத்தை நினைத்து வந்தோம். அதை முற்றிலுமாக மாற்றிப்போடுவதாக இது இருக்கிறது. அமேசான் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் சிறிய குழுக்களாகவும் நிர்வாணமாகவும் வாழ்ந்ததாகவே நாம் இதுவரை கேள்விப்பட்டுள்ளோம். சிறு குழுக்களாக அவர்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள் என்றே நாம் படித்துள்ளோம். ஆனால், பண்டைய கால மக்கள் சிக்கலான நகர்ப்புற சமூகங்களில் வாழ்ந்ததை இது காட்டுகிறது" என்றார்.

எவ்வளவு பழமையானது: இந்த நகரம் 3,000 முதல் 1,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது இது அமேசான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிற கொலம்பியன் கலாச்சாரத்தை விட விடப் பழமையானது என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் 1,000 ஆண்டுகள் வரை மக்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த LiDAR கணக்கீடு கடந்த 2015ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்ட போதிலும் அதன் முடிவுகள் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டன. 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 6,000க்கும் மேற்பட்ட உயர்த்தப்பட்ட மண் மேடைகளை இது நமக்குக் காட்டியது. இந்த பகுதியில் மரத்தாலான கட்டிடங்கள் இருந்தது அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குளிர் காயத் தனி இடம், மக்கள் வாழத் தனி இடம் ஆகியவற்றையும் கொண்டுள்ளன.

இந்த குறிப்பிட்ட பகுதியில் மொத்தம் ஐந்து பெரிய குடியிருப்புகள் இருந்துள்ளன. மேலும், இங்கே விரிவான சாலை அமைப்புகளும் இருந்துள்ளன. ஏதோ ஓரிரு கிமீ தொலைவுக்கு மட்டுமில்லை.. சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரை கூட சாலை இருந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+